பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பலமாகக் கால்களை ஊன்றிக் கொண்டிருப்பது வழக் கம், அதே சமயத்தில் புரட்சிகரமான வேலைகளையும் நடத்தி வந்தார். காலப் போக்கில் கழிந்து போன பழைய பொருளாதாரக் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்ததற்காகவோ, அல்லது பழைய மரபு களுக்கு ஆக்கமளித்ததற்காகவோ, பிற்போக்கான சக்திகளுக்கு ஊக்கமளித்ததற்காகவோ பலர் அவரைக் குறை கூறினர். ஆனால் பெரிய அளவில் அவர் புரிந்து வந்த அருஞ் செயல்களைப் பரிசீலனை செய்து பார்க் கும் ஒருவர், அவைகளில்ை ஏற்படும் புரட்சிகரமான விளைவுகளைக் கண்டு திகைத்துப் போய்விடுவார். அர சியலிலோ, சமூகத் துறையிலோ நிகழ்ந்துள்ள அவரு டைய செயல்களை நாம் கவனித்தால், நாம் இந்த உண் மையைக் கண்டு கொள்வது கஷ்டமா யிருக்கிறது; ஏனென்ருல் நாம் மோதல், பூசல் முதலிய மேலை நாட்டு மரபுகளில் வளர்ந்து வந்தவர்கள். உண்மையான ஒரு புரட்சி மக்களிடமிருந்தே உண்டாகும் என்றும், மேல் நிலையிலுள்ள சிலரிடமிருந்து உண்டாகாது என் றும், புரட்சி முக்கியமாகச் சமூக சம்பந்தமாகவே தோன்றும் என்றும் அவர் அறிந்திருந்தார். அவருக்கு முன் ல்ை சமூகச் சீர்திருத்தவாதிகள் பலர் தோன்றி யிருந்தனர், அவர்கள் சிறு சிறு மாற்றங்களையே உண் டாக்க முடிந்தது, அல்லது புதிதாக ஒரு தனி வகுப்பை அமைக்க முடிந்தது; ஆனால் காந்திஜி இராம ராஜ்யம்' என்று சொல்லிக் கொண்டு, இலட்சக் கணக்கான வீடு களில் புரட்சியைப் புகும்படி செய்துவிட்டார், இத்த இனக்கும் என்ன கடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் முற்றிலும் உணராத நிலையிலே அவர் சாதிக்க முடிந்தது. அவர் சாதி முறையை முற்றிலும் கண் டிக்க வில்லை. (பிற்காலத்தில் அவர் ஒரளவு கண்டித் துள்ளார்), ஆனால் தாழ்த்தப்பட்டவர்களையும் தீண் டாதவர்களையும் உயர்த்திவிட வேண்டுமென்று அவர்