உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

குச்சிக் கிழங்கு மூலம் தயாரான 'சவ்வரசி' வங்காள நாட்டுக்கு ஏராளமாகச் சென்றுகொண்டிருந்தது—அதனா லேயே நல்ல கிராக்கி இருந்தது—விலையும் சூடு பிடித்து இருந்தது—அதனால் குச்சிக் கிழங்கு பயிர் செய்தால் கணிசமான இலாபம் கிடைத்தது.

குச்சிக்கிழங்குகொண்டு செய்யப்படும் 'சவ்வரசி' சத்தற்றது, உடலைக் கெடுக்கக்கூடியது, இனி வங்காளத்தில் அதனைக் கொண்டுவரக் கூடாது என்று, புதிதாக ஓர் உத்தரவு கிளம்பிவிட்டதாகச் சொல்லி, வியாபாரிகள், குச்சிக்கிழங்கு வாங்குவதைக் குறைத்துக்கொண்டார்கள்—பத்து மாதம் பாடுபல கொடுத்து, பிரசவத்தின்போது ஆபத்தையே உண்டாக்கி கடைசியில், வைத்தியர் உதவிபெற்று, வெளியே வந்த குழந்தை, 'ஊமை' என்று தெரிந்தால், தாயின் மனம் என்ன பாடுபடும்! வேலப்பன் நிலைமை அப்படியாகிவிட்டது. கண் எதிரே குழந்தை இருக்கிறது, கருவில் உருவாகியது, மெத்தக் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தது, வாரி அணைத்து, உச்சி மோந்து முத்தமிட்டு பட்ட கஷ்டம் அத்தனையும் பஞ்சாகப் பறந்ததடா பாலகனே, என்று கொஞ்சிக் குலவிய தாய், தான் பெற்ற செல்வம், 'ஊமை' என்று அறிந்தால், துடிதுடித்திருக்காமலிருக்க முடியுமா? வேலப்பன், குச்சுக்கிழங்கு பாங்காக வளர வளர, அதை வெற்றியுடனும் பெருமையுடனும் பார்த்துப்பார்த்துப் பூரித்துக் கிடந்தான். அவனைப் பார்த்து வேறு சிலரும் அந்தக் கிராமத்திலும் சுற்று வட்டாரத்திலும் அதேபயிர் வைத்தார்கள்—என்றாலும் வேலப்பன் கொல்லையிலே இருந்ததுதான் முதல்தரமானது என்று எல்லோருமே சொன்னார்கள்.

"விவரம் புரியாமெ, நாம எப்பவும் நெல்லு நெல்லுன்னு கட்டிக்கிட்டு அழறோம். 'போட்டா நெல்லு போடாட்டி புல்லு'ன்னு இருந்துவிடறோம். அண்ணேன்! நெல்லிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/12&oldid=1575582" இலிருந்து மீள்விக்கப்பட்டது