உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

மில்லை என்று, காகித மலரினை முகர்ந்து கொண்டே, பேசிடும் நாடகக்காரர்போல அல்லாமலும் காதலைப்பெற்று இனவுற்று அனுபவம் பெறாமலேயே, வீட்டில் காட்டுக் கூச்சலின்றி வேறு கேளாத குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே, காதலின் மணம், மாண்பு, மதுரம் ஆகியவை பற்றிப் பேசிடுவோர்போல அல்லாமலும், செல்லி காதலைப் பற்றிய பேச்சோ பாட்டோ தெரிந்துகொள்ளாமலேயே, உண்மைக் காதலைப்பெற்று மகிழ்ந்தாள்—அவளுக்கு அந்த இன்பத்தை அளித்த வேலப்பன், 'வசனம்' கேட்டிருக்கிறானே தவிர, மனப்பாடம் செய்துகொண்டு பேசுபவனல்ல. சில சமயங்களிலே ஒரு அடி இரண்டு அடி, காதல் பாட்டுப் பாடுவான், தலைப்பு ஒன்று முடிவு மற்றொன்றாக இருக்கும்!!! கொடி அறியாமலே, மணம்கொண்ட மல்லிகை மலர்ந்திருப்பதுபோல, செல்லியின் உள்ளத்தில் காதல் பூத்து, மணம் பரப்பிற்று. கிராமம், எனவே யாரும் அறியார்கள் என்று இவர்கள் ண்ணிக்கொண்டிருந்தபோதே, செல்லாயி—வேலப்பன், விஷயம் வெகுவாகவும் வேகமாகவும் பரவிக் கொண்டிருந்தது. வம்பு தும்புக்குப் போகாதவன், வருவாய் அறிந்து செலவு செய்பவன், பெரியவர்களிடம் மரியாதை காட்டுபவன், பொருளுக்காக அலையமாட்டான், இல்லை என்று எவரிடமும் கை ஏந்தவுமாட்டான். உழைப்பான், நத்திப் பிழைக்கமாட்டான்—ஊருக்கு உபகாரம் செய்வான், பெரியதனக்காரனாகி மிரட்டமாட்டான்—என்று வேலப்பன் குணம் கிராமத்தாரால் பாராட்டப்பட்டது.

அம்மை நோய் கடுமையாகப் பரவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தில் பாதிப் பேர்களைப் பலிவாங்கிவிட்டது — அந்தச் சமயத்தில்தான் வேலப்பனுடைய தாயும் தந்தையும் இறந்து போயினர்—ஒண்டிக் கட்டையானான் வேலப்பன்.

"இனி அவனுக்கு ஒரு கால்கட்டு ஏற்பட்டு, அதன் வயத்திலே ஒரு பூவோ பிஞ்சோ முளைத்து, பிறகுதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/8&oldid=1575579" இலிருந்து மீள்விக்கப்பட்டது