பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

ஒரு புதுச் சிலப்பதிகாரமும் ஒரு கம்ப ராமாயணமும் தோன்ற முடியும்......

செய்யுள் இயற்றுபவர்களின் எண்ணிக்கை நம்மிடம் இன்று அதிகம் தான் என்ருலும், செய்யுள் எல்லாம் கவிதையாகி விடாது என்பதில் என்ன சந்தேகம்? யாப்பு, இலக்கணம், அணி என்று அசைக்க முடியாத சட்டங்கள் இட்டு, எதுகை, மோனே, சீர், தளை என்றெல்லாம் நைத்து போன சிந்தனைகளை எடுத்து எடுத்து அளித்து வந்த தமிழ்க் கவிதைக்கு கோபால கிருஷ்ண பாரதியாரும், சுப்ரமணிய பாரதியாரும் ஓரளவுக்குப் புத்துயிர் தந் தார்கள். கவிதையோடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள் அவர்கள்.

பக்தி விசேஷம், இசை முதலிவற்ருல் முந்திய பாரதி யாரும், சமூக வெறி சுதந்திர வேகத்தில்ை பிந்திய பாரதி யாரும் தமிழ்க் கவிதைக்குப் புதுமை தர முயன்ருர்கள். இருவருக்கும் இசை நயமும் உதவியது. இந்த இசை நயம் ஒரளவுக்குத் தனிக் கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசை பாடுகிற மரபு இருக்கலாம். ஆனல், சங்கநூல், கிலப்பதிகார (இசையற்ற அகவல் சொல்லளவு மரபு தமிழுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்! தமிழில் புதுக் கவிதை இலக்கணமாக இடைக் கால இலக்கண அணி மரபுகள் ஒழித்து மிகப் பழைய மரபுகளைத் தேட வேண்டும் என்பது ஒரு விதத்தில் தெளிவாகிறது என்றே சொல்லலாம். . பல ஐரோப்பிய மொழிகளில் கவிதையை சாகவிட்டு விடுவதில்லை என்று பல புதுக் கவிகள் பிடிவாதமாகவே புதுக் கவிதை செய்து வருகிறர்கள். இந்தப் புதுக் கவிதை யிலே புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலப் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும், இன்றையப் புதுமை கஜன் எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு தேர் நடையும், அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்