பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

பாழ் நிலம் என்ற தன் சிறந்த கவிதை உள்பட புதுக் கவிதைத் துறையில் தலே சிறந்த சாதனை காட்டி யுள்ளார் எலியட். அவரைப் போலவேதான் எஸ்ரா பவுண்டும். அவர் கூறுகிருர்: "ஒருவர் எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிற போதுதான் ஒருவர் லகு கவிதை எழுத வேண்டும். அதாவது தீர்மானிக்கப்பட்ட சந்த முறைகளால் முடிவதை விட அதிக அழகுடன் ஒரு ஒலி நயத்தை பொருளே (கவிதை உள்ளடக்கம்) ஏற்றிக் காட்ட முடிகிற போது தான். அல்லது விதி முறையான மாருத, ஒலிக்குறி கொண்ட செய்யுளின் அளவை விட அதிக இயல்பானதாக, பொருளின் உணர்ச்சித் தன்மையின் பகுதியாக அதிகம் இருக்கும், அதிக பொருத்தமானதாக, உற்றதானதாக அர்த்தம் சொல்லத் தக்கதாக இருக்கிறபோது தான்.

எஸ்ரா பவுண்டு தன் கேன்டோ கவிதைகள் மூலம் புதுக் கவிதையை சிறப்பாக்கியவர். இப்படி லகு கவிதை பற்றி அந்த துறையில் சாதன காட்டியவர்களே கூறி இருப்பதை நாம் பார்க்கிற போது இந்த முயற்சி ஏதோ யாப்பு தெரியாமல் எழுதப்படுவது என்பதில்லை, யாப்பை மீற வேண்டும் என்பதுக்காக செய்யப் படவில்ஜல என்பதும் தெரிய வருகிறது.

லகு கவிதை எழுதுபவர்களுக்கு ரொம்ப நுண்ணுனர் வள்ள செவி தேவையாகும். நல்ல வேலை செய்ய விரும்புகிறவனுக்குத் தான் லகு கவிதை சாத்தியம். லகு கவிதையின் ஊடேயும் எளிமையான ஒரு சந்தப் போக்கின் சாயல் பதுங்கிச் சென்று கொண்டிருக்கும். புதுக் கவிதை வாசகர்கள் இவைகளே மனதில் கொண்டால் லாபகரமானதாகும்.”

(எழுத்து-97)

புதுக் கவிதைக்கு எழுந்த எதிர்ப்பின் தன்மையையும், அப்படி எதிர்த்தவர்களின் தன்மையையும் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு பதில் கூறும் விதத்தில், புதுமை தாங்காத