பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

கிணற்றுத் தவளைகள்!' என்ற கட்டுரை 98வது ஏட்டில் வெளியிடப்பட்டது.

‘எழுத்து ஒன்பதாம் ஆண்டில், வழக்கமாக எழுதிக் கொண்டிருந்தவர்களின் புதுக் கவிதைப் படைப்புகள் இடம் பெறவில்லை, சி. மணியின் கவிதை ஒன்று, வ. க. கவிதைகள் இரண்டு, எஸ். வைதீஸ்வரன் கவிதைகள் மூன்று, கி. அ. சச்சிதா நந்தம் கவிதைகள் நான்கு. இவை போக மற்றவை எல்லாம் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் தான். ஹரி சீனிவாசன், நீல. பத்மனபன், பூ. மாணிக்கவாசகம், எழில்முதல்வன், இரா. மீனுட்சி முதலியோர் உற்சாகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆற்றலைக் காட்டும் தரமான படைப்பு கனாகவே அவை அமைந்திருந்தன.

நா. காமராசனின் புல் எழுத்து மே-ஜூன் இதழில் (101-102) வெளிவந்தது.

வால் முளைத்த மண்ணே வசந்தத்தின் பச்சை முத்திரையே உடல் மெலிந்த தாவரமே உன்னே பனித்துளிகளின் படுக்கையறை என்பேன்.

நஞ்சைத் தண்ணிரில் நனைந்து வளர்ந்து நாள் தோறும் அறுவடையாகும் நாட்டியப்புல்லே பால் தரும் கால்நடைகளின் தின்பண்டமே பச்சை நிறத்தின் விளம்பரமே குசேலரின் உணவுக் களஞ்சியமே குதித்தாடும் கடல் நீரைக் காதலிக்காமல் உப்புருசி பெற்று விட்ட

ஓவியப்புல்லே!

மாதம் தோறும் வெளிவந்த எழுத்து அதன் ஒன்பதாம் ஆண்டின் பிற்பகுதியில் (மே-ஜூன் முதல்) இரண்டு மாதங்களுக்கு ஒரு இதழ் என்ற முறையில் தான் பிரசுரம் பெற முடிந்தது, அதன் பத்தாம் ஆண்டில், முதல் மூன்று மாதங்கள் மாசிகையாக வந்த பின்,