பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

அதன் மீது காந்திஜியின் வரலாற்றையும் சாதனை யையும் அவரது மரணத்துக்குப் பிந்திய நிலமைகளையும் தன்பார்வையில் எழுதியிருக்கிருர், ரஷ்யக் கவியான மயகாவ்ஸ்கி ரஷ்யப் புரட்சித் தலைவன் லெனினைப் பற்றி 2000 வரிகளில் 1924ல் அவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு எழுதியுள்ள, கவிதையில் ரஷ்யப் புரட்சி சரித்திரத் தையும் லெனினின் சாதனையையும் பிணைத்துத் தன் பார்வை யில் எழுதி, இருப்பதுபோல, தானும் 2000 வரிகளில் மகாத் மாவைப் பற்றிக் கவிதை எழுதியுள்ளதாகவும் செல்லப்பா குறிப்பிட்டிருக்கிருர் ஆசை பற்றி அறையலுற்ற செல்லப் பாவின் முயற்சியையும் உயர்ந்த நோக்கத்தையும் சோதன்ை ஆர்வத்தையும் பாராட்டத்தான் வேண்டும். &

தாட்டுக்கு சுதந்திரம் பெறுவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, நாட்டு மக்களிடையே விழிப்பு உண்டாக்கி, அவர்களே போராட்டத்தில் ஈடுபடுத்தி, வேற்றியும் பெற்ற தலைவன், சுதந்திரம் கிடைத்த உடனேயே சுட்டுக்கொல்லப்பட்டு இருபது ஆண்டுகள் கழிந்த பின்னர் எழுதப்பட்ட இக்காவியம் கோடி கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மண்ணகத்தில் தர்மம் காக்கப் போராடியவர்களே நினைவு கூர்கிறது. வேத காலம், புராண இதிகாச காலம் எல்லாம் தாண்டி வரலாற்றின் அண்மை நாட்கள் வரை தொடுகிறது. மூத்தாய்ப்பாக, - .

இவை அத்தனையும் இன்று பாடப்புத்தக வரலாற்றுக் கதைகள் மேடைப் பேச்சின் வாய் வீச்சுக்கு பயணுகும் பழம் பெருமைகள் தகவல் சாதனை அறியா இளம் தலைமுறைக்கு வெறும் போட்டோ ஆல்பங்கள்.

என்று குறிப்பிடுவது: நயமாக, ரசமாக அமைந் துள்ளது.