பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ந்து வணங்கி காட்டு வாத்தாகி சிறகை விரி, வாழ்வும் வேடன் தாங்கலாகும் என்று அறிவுறுத்துகிறது காட்டுவாத்து.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் தத்துவம் என்ற தன்மையில் இதில் புதுமை ஒன்றும் இல்லே. பறவைகள் "நாளே” பற்றிக் கவலைப் படுவதில்லை, அடுத்த வேனே உணவைச் சேர்த்து வைப்பதுமில்லே, இயற்கை வாழ்வு வாழ்கின்றன. அவ்வாறே மனிதர்களும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஞானிகள் எல்லாக் காலங்களிலும் கூறி வருகிற தத்துவம் தான் இது, கவி பாரதியார் கூட விட்டு விடுதலையாகி நிற்கும் சின்னஞ்சிறு சிட்டுக் குருவியைப் போலே’ மனிதனும் வாழ்ந்து இன்புற வேண்டும் என்று வலியுறுத்தி யிருக்கிருர், - -

பிச்சமூர்த்தி பழைய தத்துவத்தை அழுத்தமாகச் சுட்டிக் காட்ட வேடன்தாங்கலேயும் காட்டு வாத்தையும் உவமையாகக் கொண்டிருக்கிருச். இது புதுமை.

பல கருத்துக்களையும் உணர்ச்சிகளேயும் பொறுக்கி எடுத்து இசைய வைக்கும் முயற்சி தான் புதுக்கவிதை' என்ற அவரது கூற்றுக்கு ஏற்ப, போர்க்கொடி, சுயநலம், பொதுச் சேவை, கலாசாரம், சரித்திரம், கால வெள்ள இயல்பு முதலி யன பற்றிய சித்தனேக் கருத்துக்களே, இயற்கை காட்டும், தத்துவத்துக்கு இனேயப் பொருத்தி, கவி தமது எண்ணங் களைக் கவிதையோட்ட மாக்கியிருப்பது ரசனைக்கு விருந்தா கிறது.

'உடலென்னும் ஒன்றைச் செய்யும் விந்தை விஞ்ஞானம் அவ் உடலிலேயே பல மர்ம ஆற்றல்களேயும் சேர்த்திருக் கிறது. இயந்திரத்தைக் செய்த கடவுள், அதற்கான பட்டறையையும் அதிலே வைத்திருக்கிருர், உடலில் நோவு கண்டால் அதை மாற்றும் மருத்துவர்களும் மர்மமாய் உள்ளேயே இருக்கிருர்கள். உதாரணத்துக்கு, கண்ணில் மண் விழுந்தால், கைவைத்துக் கசக்கக் உடாது. விளக்