பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£4

பீடை தமிழையும் தொத்த ஆரம்பித்து விட்டதாகத் தெரி கிறது. - a

செய்யுள் இலக்கண விதிகளையும், தளைகளையும் மீறி கட்டுப்பாடில்லாமல் எழுதப்படும் கவியை பிரஞ்சு பாஷை யில் Vers Libre என்று சொல்லுவார்கள். இந்தக் கட்டுப் பாடில்லாத கவியில்ை ஏற்படும் குளு குணங்களே நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. r

கவிஞனுக்கு விலங்கிடலாமா என்று கேட்கலாம். கவிஞ னுடைய கற்பன சக்திக்கும், வெற்றிக்கும் ஒரளவு சுதந்திரம் அவசியந்தான். ஆல்ை, கவியானது சப்பாத்திக் கள்ளி படர்ந்ததுபோல சட்டதிட்டங்களுக்கு உள்படாமல் திமிறிக் கொண்டு செல்லுமேயானல் வியர்த்தமாகிவிடும் என்பது திண்ணம். r

தமிழ்க் கவியின் இயல்பையும், சம்பிரதாயத்தையும், தாள லாயத்தையும் தள்ளி வைத்து விட்டு வசனத்தையே கவிருபு மாகக் கடுதாசியில் எழுதிவிட்டால் கவியென்று ஒப்புக் கொள்ள முடியுமா ?

உணர்ச்சி பாவத்திற்கேற்ற வார்த்தைகள் வார்த்தைச்

சேர்க்கையினுல் உண்டாகும் புதிய சக்தி ; உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகள், துடிப்புக்காகக் காட்டக் கூடிய தாளம். Rhythm இவைகள் உண்மைக் கவிக்கு இன்றியமையாத சாதகங்களில் சில, இவற்றில் சிரேஷ்டமானது தாளம் தான். தாளம் என்ற கருவியை வைத்துக் கொண்டு தான் கவிஞன் கேட்போருடைய ஹிருதயத்தைத் தட்டி எழுப்பிப் பாடாகப் படுத்தி விடுகிருன்." - - - '• . .

இத்தப் புது ரகக் கவிகளோ தாளத்தை கைவிட்டு விட் டார்கள். உரையும் செய்யுளுமில்லாத வெளவால் கவிதைக்கு தமிழில் ஒரு ஸ்தானம்-நிரந்தரமான ஸ்தர்னம்-உண்டா ?”

28-3-1939 சூருவளி இதழில் வந்த இது தான் அச்சு ரூபத்தில், புதுக்கவிதைக்கு விரோதமாக எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் ஆகும்.