பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

பெயரால் அவர்கள் கர்வம் பேசி மகிழ்வதையும் விஞ் ஞானி’ சுட்டுகிறது.

சுலபமாகப் பணம் பண்ணி உயர்ந்தவனின் வாழ்க்கை நோக்கையும் மனப் போக்கையும் சுவையாகச் சித்திரிக் கிறது பெட்டிக் கடை நாரணன்".

தாளுகத் தங்கம் தடத்தில் கிடைத்தால் ஓடென் ருெதுக்க நான் பட்டினத்தாரா?

என்றும், பாவமொன்றில்லா விட்டால், பாருண்டா? பசியுண்டா? என்றும் அவன் கேட்கிருன், உயிர்ப்பும் உணர்ச்சியும், பரிகாசத் தொனியும், வாழ்க்கை உண்மை களும் கலந்துள்ள மணியான கவிதை இது.

புராதனமான கதை எதையாவது ஆதாரமாகக் கொண்டு நெடுங்கவிதை புனேயும் வழக்கத்தை இப்போதும் ந. பி. கையாண்டிருக்கிருர், அப்படிப் பிறந்ததுதான் வழித் துணை’.

படைப்புக் கடவுள் (ஆதிக்குயவன்) ஆக்குகிற பாத் திரங்கள் குறைபாடுகளை உடையனவாக இருக்கின்றன. ஆளுல் உண்மையான கலைஞன் -

சமேதை

பொருளுக்கு அடிமை

ஆகாத பேதை,

செய்வதைச் சுத்தமாய்ச்

செய்வதில் மனத்தை

கற்பூரமாக்கும்

இயல்புப் பைத்தியம்’ ஆத்ம பூர்வமாக ஈடுபட்டுச் செய்கிற வேலை அற்புதப் படைப்பாக விளங்குகிறது. பிரமனின் படைப்புகளுக்கும் அழிவு உண்டு. பிரமன்கூட காலவெள்ளத்தில் இழுபட்டு மாறுதல் பெறுவான். கலைஞன் சிருஷ்டி அழிவுறுவதில்லை;

Iడిు@@t மூவாப் பெருமையுடன் திகழ முடியும்,