பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தியுள்னவர்கள். ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. பானுச்சந்திரனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாமும் உணரும் சக்தி வேண்டும். நமக்குப் பரிச்சயமான பாதுகாப்புத்தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங் களும் பரிமாணங்களும் பானுச்சந்திரனின் உலகில் தகர்க்கப் படுகின்றன. கண்களின் வீச்சு தொடும் அடிவானம் வரை யாவது நீங்கள் சென்று, அடிவானத்திற் கப்பால் அகன்று விரியும் உலகத்தைப்பற்றிய ஞானம் இருந்தால் தான், அடி வானம் வரை மொழி வகுத்த பாதை வழியே சென்று அதற்கு அப்பால் பானுச்சந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். ... இன்னுெரு சிலரோடு பானுச்சந்ரெனும் மொழிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுபவர்."

இவ்வாறு சாமிநாதன் அம் முன்னுரையில் அறிவிக் கிருர். பானுசந்திரனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு, ஒன்று, அவரது படிமஉலகம், இரண் டாவது, மன பிரபஞ்ச உணர்வுலகம், படிமம், காட்சி வழிப்பட்டது. மன -பிரபஞ்ச உணர்வுலகம் சிந்தனை வழிப் பட்டது. மைேதத்துவ -பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது" என்றும் அவர் விளக்கியுள்ளார்.

தர்மு அரூப் சீவராமின் படிமங்களும், மன உணர்வு களும். கனவு-நனவு அனுபவங்களும் அவரது கவிதை களுக்கு ஒரு தனித்தன்மை கொடுத்துள்ளன. தனது கவி நோக்கு குறித்து தரிசனம் என்ருெரு விளக்கவுரை எழுதி யிருக்கிருர் அவர், இத்தொகுப்பின் பின்னுரையாக.

இதர சில கவிகளின் நோக்கைப் பரிகசித்துப் பழிக்கும் இக்கவிஞரின் தரிசனங்கள் எல்லாமே மகோன்னதமானவை, குறைவற்ற நிறைவுகள் என்று சொல்வதற்கில்ல; அனைத்தும்