பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27?

பரிகாசத்துக்கும் பழிப்புரைக்கும் அப்பாற் பட்டவையும் அல்ல.

இவருடைய மனவெளியில் பெண்குறி தலைகீழ்க் கருஞ் சுடர் ஆகக் காட்சி தருவதும் கண்ணுடிக்குள்ளிருந்து தன்னே உணர முயலும் இவரது அகப் பிரபஞ்ச வெளியிலே, ஆடும் சுடர்கள் ஒவ்வொன்றும் பெண்குறி விரிப்பு ஆக தரிசனம் தருவதும், பரிதியைக் கண்டு

'இவ்வொளி யோனியை தடவி விரித்தது எவர்கை? எவ்வகைப் பிரியம்?

என்று இவரது ஆசைமனம் அதிசயிப்பதும்,

சமுகத்தில் முளைத்த முலைகளாய் மயக்கும் என் பிரதியின் கண்கள்

என்பதும் கேலிக்கு இலக்காக முடியாத சித்திரிப்புகள் இல்லையே. -

பார்த்த இடமெங்கும் கண்குளிரும் பொன் மணல். என் பதாம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்ளுேடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம் (சபாலே")

போன்ற கவிதா தரிசனங்கள் ரசித்துப் பாராட்டப்பட வேண்டியவை.

"அஃ தனது 4-வது இதழை கவிதைச் சிறப்பிதழாகத் தயாரித்திருந்தது. அதில் கலாப்ரியாவின் சக்தி” கவிதைகள் அதிக இடம் பிடித்துக் கொண்டிருந்தன.