பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

தாகூரின் கீதாஞ்சலி'யால் பாதிக்கப்பட்ட கவி, சக்தி'யை எண்ணி ஆக்கியவை அவை. ரொம்பவும் முட்டிப்போன, அழுது வடிகிற, ஏக்கபூர்வமான, சந்தோஷங் குதியோடற விகுடிகளில் இதெல்லாம் வேறு வேறு வித பாவங்களுடன் என்னில் படிந்தவை. இதுக்கொரு புனித மிருப்பதாய் நான் நம்புகிறேன்' என்று கலாப்ரியா குறிப் பிட்டுள்ளார்.

ஆயினும் அவருடைய கவிதைகள் அவருடைய உணர்வுகளே, மனப்பதிவுகள், அனுபவங்களே வெற்றிகர மாகப் பிரதிபலிக்கவில்லை. இவை பரவால்லே என்று சொல்லும் படியான தன்மையில் தான் உள்ளன. மேலும், இவற்றில் சில தாகூர் கவிதைகளின் நிழல்கள் போலவே அமைந்துள்ளன.

பாலகுமாரன், இயல்பான ஓட்டமும் ஓசை நயமும் நிறைந்த கவிதைகளே படைப்பதில் வெற்றிகரமாக முன்னேறியுள்ளார். பேச்சு மொழி இவரது கவிதைகளுக்கு அழுத்தமும் உயிர்ப்பும் ஏற்றுகிறது.

"இடையினங்கள்’ என்ருெரு இனிய கவிதை குறிப்பிடத் தகுந்தது.

கொத்திக் கொண்டு போவாண்டி ஆப்பிள் சிவப்பு என் பேத்தி பாட்டி சொல்வாள் திடத்தோடே அம்மா விடுவாள் பெருமூச்சு. வெட்டிப் பொழுது கழிப்பானேன் வேலே தேடேன் எங்கேனும் அப்பா சொல்வார் தரைநோக்கி அண்ணன் முறைப்பான் எனப்பார்த்து. கொத்திக் கொண்டு போவதற்கு ஜாதகப் பகஷி வரவில்லே வெட்டிப் பொழுதின் விடிவுக்கும் வேளை வரலே இதுநாளாய், வேலை தேடிக் கால் தேய வெளியே நடக்கத் தலைப்பட்டால் 나-18