பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

கண்ணுேட்டத்துடன். சமூகப் பிரக்ஞையுடன் மிகச் சிறந்த கவிதைகள் படைக்கப்பட்டதும் கவிதைத் துறைக்கே அதிகம் தொடர்பில்லாத பலர், இதன் பொது ஈர்ப்பால் கவர்ந்திழுக்கப்பட்டது கவிதை, புலவர்களின் செய்யுள் கட்டிலிருந்து விடுபட்டு மக்களின் அரவணைப்பில் மகிழத் துடித்ததும் முற்போக்கு எண்ணத்துடன் எண்ணற்ற விலை யிலாக் கவிமடல்கள் வெளிவந்ததும்- முற்போக்கு இயக் கங்கள் ஆங்காங்கு அணிதிரளத் தொடங்கியது-தனிமனித வாதத்துக்கெதிரான சமூகயதார்த்தவாதம் தன் தத்துவ பலத்தோடு வியூகம் அ ைமத்ததும் இந்தக் காலத்தில் தான்.”

(வானம்பாடிகளின் வரலாறு பற்றிய கட்டுரை: ஞானி அக்னி)

நான் விடுதலைப் பறவை! எனக்கு சோனுர் பங்களா பத்மா நதிக்கரையில் வீரவியட்நாமின் மேகாங் சதுப்புகளில் மிஸிஸிபி பாலத்து உயர் முகட்டு உச்சிகளில் சொந்தங்கள் உண்டு... ... நாங்களெல்லாம் குரலெடுத்து, கண்மூடிக் கிடக்கும் மனிதருக்காய் கூவு கிருேம்: ஊழிகள் பற்பலவாய் எங்கள் குயில்களெல்லாம் வசந்தருதுக் களில் கடையாமம் கழிவேளை இசைத்த பெட்டைப் பாட்டல்ல இது! இது புதிய ஞானம்! புதிய ராகம்! புரட்சிப் பாட்டு: எங்களின் பொன்னிற அலகுகள் உள்ளே செக்கச் சிவந்த அக்னி நாக்குகள் உள் ளன. ஒவ்வொன்றுமோர் சூரியப் பிரளயம்! எங்கள் குரல்களிலோ வெல்லும் மானுடத்தின் பிரகடனம் முழங்கிவரும்! சேலம் தமிழ் நாடன் எழுதிய இந்தப் பிரகடனம்” வானம்பாடிகளின் பொது இதயக்குரல் என்றே கருதலாம்.

"வானம்பாடி கட்சி சார்பற்ற ஒரு கவிதை இயக்கம். சமுதாயப் பார்வையை முன்வைத்துக் கவிதை புடைப்புவர்