பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$

தேன் காதில் பாய்ந்து இன்பத்தைத் தருவதென்ருல் அது கவிதை உலகில் தான் நடக்கும். இரவியின் ஒளியிடைக் குளிப்பதும், ஒளி இன்னமுதினே உண்டு களிப்பதும் வசனத்திற்குப் பொருந்துமா ?

பாரதியின் காட்சி கவிதையின் மாற்றுக்கு எந்த விதத்திலும் குறையாதது. தமிழ் நாட்டு வசன கவிதையில் அது தான் முதல் முயற்சி.”

(கலாமோகினி, இதழ் 9) வசன கவிதை, மறுமலர்ச்சி என்பதெல்லாம் அர்த்த மற்றவை என்று கூறி, அம் முயற்சிகளில் ஈடு பட்டோரைக் குறை கூறியும் கோபித்தும் பொழுது போக்கிய பண்டிதர்களே கலாமோகினி தாக்க முன் வந்தது. காரசார மான ஒரு கவிதை எழுதி. அதன் ஆசிரியர் (சாலிவாஹனன்) வி. ரா. ராஜகோபாலன் எழுதியது இது--

பழமையின் பாதை, கற்ற பண்டிதர் நடை, முன்னேர்கள் வழமைஈ தெல்லாம் எங்கள் வசனமொத் ததுவே யென்று கிழமை கொண் டாடி ஏதோ கிறுக்கிவைப் பார்கள் இந்த இழவினைச் சகியாதேதும் எம்மனேர் சொன்னுல் வைவார். குப்பையைக் கூட்டி வைத்துக் கொண்டிதோர் கவிதை என்பார் எப்படி யேனும் அஃதை ஏற்றமாம் கவிதை என்று ஒப்பிட வேண்டும் என்பார் உணர்ந்தவர் தவறென்ருலோ எப்படிச் சொல்வீரென்று இழிமொழி பலவும் சொல்வார்.

உணர்ச்சியும் சொல்லும் கூடில் உண்மையில் கவிதையாமிப் புணர்ச்சியில் லாததெல்லாம் புலவர்வாய்ச் சொல்லென்ருலும் மணமிலா மலர்தானென்போம் மானிடர் டிாண்டு போனல்