பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

st

பித்தப் பேச்சுடன் பணமும் படைத்தவர் அதிகார வெறி பற்றி மனிதம் இழந்தோர் பினக் கழுகின் பெருமூக்கும் பேழ்வயிறும் நடையில் ஓர் நடிப்பும், பிணக்களை மூஞ்சியும் பெற்ற பேதலித்த மனசினர், நொண்டும் குள்ளர்கள், ராப்பகலwய் துயரால் துடித்து அலறிடும் அபலேயர் தம் ஒலத்தில் மகிழ்வு காண்போர் இவரே பாசிசப் பணியாளர்கள்!

இப்படி மேலும் வளர்வது அந்தக் கவிதை.

சென்னை நகரத்தில் ரேஸ் புத்தகங்கள் விற்பனை செய்யும் சிறுவர்கள்; சுட்டெரிக்கும் வெயிலிலும் சோற்றுக் கூடை களேச் சுமந்து பலப்பல ஆபீசுகளுக்கும் போய் உரியவர் களிடம் அவற்றைச் சேர்ப்பிக்கும் கூலிக்காரிகள்; வறுமையில் வாடும் பலதர மக்களின் உடமைகளைப் பெற்று வளமாய் வளரும் வட்டிக்கடை, யுத்தத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களிடம் தன் மகனைப்பற்றி விசாரிக்கும் ஏழைத்தாயின் அன்பையும்; அன்பனின் வருகையை எதிர்நோக்கி ஏங்கும் காதலியின் மனத்துடிப்பையும் எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி-இவற்றை எல்லாம் நடைச் சித்திரங்களாக எழுதி யிருந்தார் கே. ராமநாதன். அவற்றையும் கவிதைகளாக்க விரும்பினர். அவ்வாறே ஆக்கினேன்.

இந்தியா ரேஸ்!

மவுண்ட் ரோடு மூலை கோட்டையின் பக்கம் பஸ் ஸ்டாண்ட் ஒரங்கள் அங்கெழும் கூச்சல் "இந்தியா ரேஸ் .. புல் ரிசல்ட், வேனுமா?’’ மோட்டார் அலறல் டிராமின் ஒலம் ரேடியோக் கூச்சல்