பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2

இவ்வாருக, 1940 கள் வசன கவிதையின் வளமான வளர்ச்சிக்கு ஏற்ற காலகட்டமாக விளங்கியது. அந்த தசாப்தத்தின் இறுதியில், வசன கவிதைக்கு ஆதரவு தந்த பத்திரிகைகள் நின்று போயின. ந. பிச்சமூர்த்தி ஒரு வித விரக்தி மனநிலையில், கதை, கவிதை, கட்டுரை எதுவுமே எழுதாமல் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார். ஆகவே, புதுக் கவிதை" தேக்க நிலையுற்றது.

10. பிச்சமூர்த்தி கவிதைகள் 1937-#946

1937 முதல் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய பிச்சமூர்த்தி 1946க்குப் பிறகு. பதினன்கு வருடங்கள் எதுவுமே எழுதாமல் இருந்துவிட்டு 1959-ல் புது விழிப்பு பெற்றவர் போல மீண்டும் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதலாஞர். அவரது பிந்திய கவிதைகள் (1960கள் காலத்தவை) "எழுத்து’ பத்திரிகையில் பிரசுரமாயின.

ஆகவே, பிக்ஷாவின் கவிதைகளே. :1940களில் பிறந்த வற்றை முதல் கட்டக் கவிதைகள் என்றும், அறுபதுகளைச் சேர்ந்தவற்றை இரண்டாவது கட்டக் கவிதைகள் என்றும் ஆராய வேண்டும். முதல் கட்டக் கவிதைகளின் நோக் கிற்கும் போக்கிற்கும், கருவுக்கும் கருத்துக்கும், பிற்காலக் கவிதைகளின் தன்மைகளுக்கும் மாற்றங்கள் உண்டா என்று கணிக்க வேண்டும். அறுபதுகளில் புதுக் கவிதை பெற்ற வேகத்துக்கும் கருத்தோட்டங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் ஏற்றபடி, கவிஞர் பிச்சமூர்த்தியின் கவிதைகளிலும் வளர்ச்சி காணப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். அப்போதுதான், புதுக் கவிதைத் துறையில் பிச்சமூர்த்தியின் ஸ்தானத்தைப் பற் றி வாதங்களும் விதண்ட் வாதங்களும் கிளப்புகிறவர்களுக்கு உரிய-நியாயமானஇதில் நாம் பெற முடியும்,