பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83.

மழை இருட்டில், உழைப்பு முடிந்து, வீடு வரும் பெண்கள், புன்னிருளால் வழி விழுங்கப்பட்டிருப்பது கண்டு அல்லலுறுகிருர்கள். பாதைப் பாம்புபோல் அறியும் கால்கள், அடிஅடியாய் முன்னேற அவர்கள் வெருண்டு சொல்வது; நொடி நேரம் வெளிச்சம், வழி காட்ட வேண்டும்; வழிகாட்டவேண்டும்.

சீக்கின்றி காக்கைபோல் திரிந்து, எஃகைப் போல் தசை யுடன் உழைத்து, கால் கஞ்சிக்கு வழிதேடி வாழ்ந்து வந்த ஏழை, கண்ணுெளி இழந்து குருடான்ை. கடவுளே எண்ணிக் கதறுகிருன்: 'கண்போன பின்னர் உயிர் மட்டும் எதற்கு? சுற்றத்தின் சுமையைத் தாங்க, ஒளி பின்னும் ஈவாய். அன்றேல் உயிரின்று கொள்வாய்." .

வெய்யிலின் செதில்கள் போல் மான் புள்ளி காணுது. வேலியில் சட்டை போல் கொக்குகள் தோணுது, ஒயில்நடை போடுது வாலாட்டிக் குருவி சோலையை உருக்குது கருங்குயில் வீணே மலக்குகை மூலையில் வாயைப் பிளக்குது. - - இச் சூழலின் விலையற்ற ஒளியும், பருவத்தின் இனிப்பும், உள்ளத்தைத் தொட்டு உணர்வெழுப்பும் மலரும் பிறவும் அர்த்தமற்றனவாய் தோன்றுகின்றன பற்றற்ற யோகிக்கு, அவனுடைய வேட்கை அமுதொளி அடைவது என்ருே?" என்பதுதான். -

இனிமை, எளிமை, உணர்வு, ஒட்டம், அழகு, கருத் தாழம் ஆகியவை நிறைந்த கவிதைகள் பல இயற்றி வெற்றி கண்ட பிச்சமூர்த்தி நீண்ட கவிதைகள் (சிறு காவியம்) படைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டார். கதையை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்ட இச்சொல் ஒவியங் களுக்கு அவர் பழைய நம்பிக்கைகள் அல்லது கருத்து களேயே கரு ஆக அமைத்துக் கோண்டிருக்கிருர்,