பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s?

இடிச்சதங்கை மனத்தைக் கவ்வ அசைந்து ஆடிக் குலுங்கவே; மின்னல் பெண்கள் பிடித்த கொடிகள்' வெளியில் ஒயிலாய்ப் பறக்கவே - வந்தது பார் மரகதத்தேர், விழுந்தது பார் மழைத் துளி மாயத் தேரின் மேலடுக்கில் வீற்றிருந்த மழை அரசி புன்சிரிப்பை அள்ளிவிட்டாள் பூர்ணிமையாள் போதை போல.

கடலலைகள் நாணித் தலை குனிந்தன. நுரை மலரை மாலே கட்ட கடலுக்குள் குனிந்தன. குடியானவர்கள் நெஞ்சத்தில் பால் ததும்பியது. - - -

கர்ண பரம்பரைக் கதைதான் என்ருலும் கவிஞரின் படைப்பாற்றலும், கற்பனை வளமும், சொல்லாட்சியும் மழை அரசி காவியத்துக்கு ஜீவனும் எழிலும் சேர்த் துள்ளன. -

சாகாமருந்து’ என்ற நெடுங்கவிதையின் கருவும் பழமையான, சிறு விஷயமே. - * ×

மரணம் பற்றிப் பேசுகிருர்கள் சிலர். கமேகத்திலோர் வர்ணம், நீரிலோர் குமிழி, காற்றிலோர் அசைப்பு. கனவிலோர் சிரிப்பு, வாழ்வு இதுவேயாகில், வாழவும் நாம் வேண்டாம் என்கிருன் ஒருவன். -

பொன்மலர்த் தேனில் சாகாமருந்து இருப்பதாகக் க்னவு கண்டேன் என்று வர்ணிக்கிருன் மற்ருெருவன். அதை நாம் எப்படி அடைவது என்று ஜனங்கள் கேட்க அவன் கனவை மேலும் விளக்குகிருன். ஒரு ஞானி மட்டும் வெளியிலே இல்லை; சென்னி உச்சி நறுமலரில் அமுதம் உண்டு என்றர். -

மலைமேல் தேடிச் சென்றவர்கள் சோமச் செடியைக் கண்டார்கள். சோமபாணம் செய்து பருகி மகிழ்ந்தார்கள். காடுகளில் தேடி அகலந்தவர்கள் அபினி, கஞ்சா, தென்ன பனைமரங்களின் கள் ஆகியவற்றைக் கண்டு களிப்புற்ருர்கள்.