பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நா. வானமாமலை

வாழ்ந்தே முடியணும் வாழ்வு
இதுவே உலகின் நியதி. (பக்கம் 18, விதி)

வாழ்க்கையில் துன்பமில்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்லும் புதுக் கவிஞர் முருகையன் கீழ்வரும் உருவகத்தால் அவரது கருத்தை விளக்குகிறார்:

பாம்புச் சுருணை தட்டுப்படாவிடில்
எதுவும் இல்லை யெனினும்
எனக்குக் கவலையில்லை . (ப. 75, பரவாயில்லை )

இருள் வாழ்க்கையை விழுங்குமென்று, தின்னும் நிகழ்ச்சியைத் தின்னப்படும் மனிதன் ரசிக்கிறானாம். ஞானக் கருமை ஈன்ற கவிதையால் வைத்தீஸ்வரன் சொல்லுகிறார்:

நானேது நிழல் எங்கு?
நெருக்கித் தள்ளிய கருமை

என்னை மென்று கொண்டிருந்தது.

வாழ்வே சாவின் பாதை என்றும், சாவுக் கோயிலின் சங்கீதப் அழைக்கிறதென்றும் அழுகுரல் கொடுக்கும் இக்கவிஞர்கள் சாவைப் பற்றித்தான் அதிகமாகப் பாடுகிறார்கள். சாவில் தான் தங்கள் மன—உறுத்தல்களுக்கும் தனிமனித மகாயுத்தத்திற்கும் முடிவு காண்கிறார்கள். இனிச் சாவைப் பற்றிய அவர்களுடைய கவிதைகளைக் கவனிக்கலாம்.

சாவு

இறப்பு என்ற தலைப்பில், புதுக்கவிஞர்களால் ‘இன்டெலக்சுவல்’ கவி என்று பட்டம் சூட்டப்பட்ட டி.கே. துரைசாமி சாவு பற்றி இரண்டு கவிதைகளில் தமது கருத்தை வெளியிடுகிறார்.

ஓலமிடும் நின்னுடுக்கை
ஓலமிடும் நின்னுடுக்கை
என்ன ஓலமிடும் நின்னுடுக்கை
சாவுக்கும் அர்த்தமுண்டு
சம்போகத்தில் நாசமுண்டு (ப. 35, கடன்பட்டார்)

இது பட்டினத்தார் பாடலைப்போல் பழமையானது தான். இவனை மயான சாமியாகக் காணும் நம்பிக்கை நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. கபாலீசுவரர்