பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையில் புதிய போக்கு

67

செர்கேக்கு எதுவுமே விளங்கவில்லை. “மணமகனுக்கு ஏன் பணம் கொடுக்கவேண்டும்? கலியாணத்துக்கு என்ன செலவு? விருந்துக்கு என்ன? ஒரு மாதச் சம்பளத்தில் ஒரு பங்கு செலவாகுமா?” என்றார்.

இந்தி எழுத்தாளர் திடுக்கிட்டார். “இங்கு ஒரு கலியாணத்துக்கு என்ன செலவாகும்?” என்றார். அவர் பதில் சொல்லாமல் உடனே எங்களை யுக்ரேனோ ஓட்டல் விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். 25 விருந்தினர்களுக்கு ‘ரிசர்வ்’ செய்யப்பட்ட மேஜைகளைப் பார்த்தோம். மேஜை மீது மதுக் கிண்ணங்கள் இருந்தன. ‘திருமணம்-வாழ்க......’ என்று மணமகன், மணமகனின் பெயர்கள் ரஷியனில் எழுதப்பட்டிருந்தன.

22 பேர் வத்தார்கள். மேசை நாற்காலிகளில் அமர்ந்தார்கள். மணமகன் மணமகள் யார் யாரென்று தெரியவில்லை.அவர்கள் உட்கார்ந்ததும் இரண்டு மலர்ச்செண்டுகளை மணமக்களிடம் ஆடர்கள் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோருமே சமவயதினர். மணமக்களின் தாய் தந்தையர்கள் வரவில்லை.

மணமக்களைச் சுற்றியிருந்த நண்பர்கள் ஒரு பாடகியை ஏற்பாடு செய்திருந்தனர். அவள் பாடினாள். பிறகு விருந்து. ஒவ்வொருவரும் வெவ்வேறு உண்டிகளுக்கு ஆர்டர் செய்து பணம் கொடுத்தார்கள். மணமகனும் மணமகளும் வோட்கா வாங்கி எல்லோருடைய கிண்ணங்களிலும் ஊற்றினார்கள். எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஒரு மடக்குக் குடித்தான் கள். ஒருவன் “கசக்கிறது” என்றான். உடனே எல்லோருடைய கண்களும் மணமக்கள் மீது திரும்பின. மணமக்கள் இறுகத் தழுவி உதடுகளில் முத்தமிட்டனர். மறுபடி ஒரு மடக்கு—மறுபடி “கசக்கிறது” என்ற குரல்; மறுபடி முத்தம். சில தடவைகளுக்குப் பிறகு மணமகள், “இனிக்கிறது” என்று சொல்லுகிறாள். எல்லோரும் சிரிக்கிறார்கள். பெண்கள் “இவ்வளவு சீக்கிரம் இனிக்கலாமா?” என்று கேட்கிறார்கள். பிறகு நீண்ட நேர ரஷிய விருந்து. பிறகு நடனம்.

செர்கே சொன்னார். ‘கசக்கிறது’ என்பதைச் சொல்லி, ‘இனிக்கிறது’ என்று மணமக்கள் சொல்லும்வரை திருமண நிகழ்ச்சியாம். இனி இவர்கள் பதிவு அலுவலகத்தில் பதிந்து கொள்ளுவார்களாம்.

“என்ன செலவாகலாம்?”

வோட்காச் செலவு 20 ரூபிள்; விருந்தறை வாடகை 5 ரூபிள்; விருந்துச் செலவு அவரவருடையது 5 ரூபிள். மணமக்களுக்குச் செலவு கிடையாது. பாடகிக்கு ஊதியம்