பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

நா. வானமாமலை

10 ரூபிள்; உடை, வழக்கமாகத் தைக்கிற புது உடைகள்; ஆபரணங்கள் இல்லை; வரதட்சினை இல்லை.

பரிசுகள்—உண்டு ஏராளமாக. மணமகன் டெலிவிஷன் தொழிலாளி, மணமகள் ஆசிரியை. டெலிவிஷன் தொழிலாளிகள் பரிசளிப்பார்கள்; இவளுடைய சக ஆசிரியர்கள் பரிசளிப்பார்கள்; தாய் தந்தையர்கள் பரிசளிப்பார்கள். இவர்கள் தனி “ஆஸ்டல்”களில் வசிக்கிறார்கள்; இனி இரண்டு அறை கொண்ட வீட்டிற்குப் போய்விடுவார்கள்.

“இவர்கள் ஏன் கலியாணம் செய்து கொண்டார்கள்?” என்றார் இந்தி எழுத்தாளர் செர்கே “நாம் ஏன் சாப்பிடுகிறோம்?” என்று கேட்டார்.

“அதுவல்ல; இவர்கள் ஒருவரையொருவர் ஏன் வாழ்க்கைப் பங்கினர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள் என்று தெரிந்துகொள்ளவே இக்கேள்வியைக் கேட்டேன்” என்றார் இந்தி எழுத்தாளர்.

“அதுவா? இவன் அவளை நூலகத்தில் சந்தித்தான். அடிக்கடி அவர்கள் சந்தித்தார்கள். அவள் எலெக்ட்ரானிக் விஞ்ஞானம் பற்றி அறிந்துகொள்ளப் படித்தாள். அவனும் படித்தான். சேர்ந்து ஒரு மாலைப்பள்ளியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்தார்கள். ஒருவரது இயல்பு அடுத்தவருக்குப் புரிந்தது. புரிந்தபின் பிடித்தது. முக்கியமாக அவனுக்குத் தனது தொழிலில் தேர்ந்தவன் என்றும் பிற தொழிலாளருக்கு உதவுபவன் என்றும் புகழ் இருந்தது. அவள் நல்ல ஆசிரியை, சமூக மதிப்புப் பெற்றிருந்தாள். அவளுடைய மாணவ மாணவியர் அவளைக் கண்டதும் துள்ளிக் குதித்தனர். இத்தகைய தனி ஆர்வங்கள், சமூகப் பொறுப்புணர்வுகள் இவற்றைக் கண்டும், தங்கள் உள்ளுனர்வான காதல் சரியான திசையில்தான் செல்லுகிறதென்று கண்டும் ஒருவரையொருவர் மணந்து கொள்ளத் தீர்மானித்தனர். தீர்மானத்தைப் பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும் கூறினர். பெற்றோர்கள் மணமகள், மணமகனது தனிப்பண்புகளையும் சமூகப் பண்புகளையும் (individual traits, social traits) பற்றி விசாரித்தார்கள் இங்கு மணவிழாக் கொண்டாடத் தீர்மானித்தார்கள். இந்த விழா மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?”

“உங்களுக்கு மனமான இருவரில் யாரையாவது தெரியுமா?” என்று செர்கேயை நான் கேட்டேன். “மணமகள் என்னோடு ஆசிரியர் கல்லூரியில் படித்தவள். நன்றாகத் தெரியும்.”—செர்கே.

அதற்குள் மணமகள், மணமகனை அழைத்துக்கொண்டு எங்கள் மேஜைக்கு வந்தாள். நாங்கள் இந்திய விருந்தினர்