பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையில் புதுமை போக்கு

69

என்று காட்ட நம் நாட்டுக் கொடியும் சோவியத் கொடியும் இணைந்து மேசை மீதிருந்தன. அவள் கேட்டாள் “இந்திய விருந்தினர்களா?”

“ஆம், இவர் பேராசிரியர் வானமாமலை. 25 வருட ஆசிரிய அனுபவம்; பண்பாட்டு ஆய்வாளர்; கம்யூனிஸ்டு. இவள் லுயூபோமோவா, மணமகள். இவர் நிகிதால் லாடிமாவ், மணமகன்.” இருவரும் தங்கள் கையிலிருந்த செண்டுகளை என்னிடம் கொடுத்தார்கள். கைக்குலுக்கினார்.

மணமகன் ரஷியனில் ஏதோ சொன்னான். எதிர்பாராத விதமாக மணமகள் என்னை முகத்தில் முத்தமிட்டாள். செர்கே “நீங்களும்...” என்றார். நான் அவள் முகத்தில் முத்தமிட்டேன். மணமகன் என்னைத் தழுவி முத்தமிட்டான். நான் அவர்களுக்கு வாழ்த்துக் கூறினேன்.

“உங்கள் இன்பம் வளர்க. இருவரும் உங்கள் அறிவுத் திறனால் சோவியத் நாட்டிற்குச் சிறந்த பணிபுரிக. கம்யூனிசத்தை நிர்மானிக்க உங்கள் அறிவுத்திறன் வளரட்டும். கம்யூனிச உலகில் வாழ இளஞ்செடிகளை நீங்கள் நட்டுக் கொடுங்கள்.” ரஷியனில் மொழிபெயர்த்தவுடன் எல்லோரும் கைதட்டினார்கள்.

சோசலிச அமைப்பில் மணமுற்காலக் கனவுக் கற்பனைகளுக்கும் அதாவது காதல் செடியில் அரும்பும் மொட்டுக்கும் மலர்க் கொத்துகளுக்கும். மணவாழ்க்கையாகிற செடி வளரும் நிலத்திற்கும் முரண்பாடுகள் இல்லை. நிலம் வளமான நிலம். கனவு கற்பனை மொட்டுகள் வளருகிற மனிதநேச நிலமே, இச்சமுதாயத்தின் இயல்பான தரை. மனித மதிப்புகளே, சமுதாயத்தின் மதிப்புகள். அதாவது, காதல், கற்பனை, கனவுகள் எல்லாம். இவை வாடுவதில்லை. மொட்டு மலர்ந்து காய்த்துக் கனிந்து......

இனி நமது கனவு+கற்பனை = காகிதங்களுக்கு வருவோம். நமது சமூக வாழ்க்கையிலிருந்து மீரா தொடங்குகிறார். பாரதி கூறியதுபோல கவிதையில், காப்பியத்தில், புராணத்தில் காதலை ரசிக்கும் தமிழன், கிணற்றோரத்தில், ஆற்றோரத்தில் காதலென்றால் சீறுகிறான். அதனைக் கொன்று பாடை கட்டி அனுப்புகிறான்.

ஆம்; நமது சமுதாய வாழ்க்கையில் திருமணப் பொருத்தம் என்பது ராசிப்பொருத்தம், நட்சத்திரப்பொருத்தம், ஜாதகப் பொருத்தம், சமுதாய உறவுப் பொருத்தம், அதாவது பொருள் நிலைப் பொருத்தம், பிறகு சாதிப் பொருத்தம், அதாவது பொருளாதார நிலை சமமானதாகவும் அல்லது தம்மைவிட