பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நா. வானமாமலை

துறவு பற்றிப் பேசிப் பெருமைப்படும் நாட்டில், உலக அறிவும் இன்பங்களும் கீழ்த்தர உண்மையென்றும், வெறுமையையும் உள்ளத்தைத் துழாவுதலையும் உயர்தர உண்மையென்றும் கருதுகிற இந்நாட்டில், இளங்கோவையும் கம்பனையும் பாரதியையும் ஷெல்லியையும் விட்மனையும் பின்பற்றி மீரா கூறுகிறார்:

நான் துறவியாகப் போகிறேன்
பற்றுகள் அனைத்தும் முற்றும் நீக்கிப்
பரம்பொருளிடம் மட்டும்
பற்றுவைக்கும் துறவிகளைப்பற்றி
நீ கேள்விப்பட்டிருப்பாய்.
நான்
சகல பற்றுக்களையும் வீசியெறிந்துவிட்டு
உன் மீது மட்டும் பற்று வைக்கும்
துறவியாகப் போகிறேன்.

‘வீசியெறிந்துவிட்டு’ என்ற எளிய சொற்களில் கவிஞர் இளமையின் காதலுணர்ச்சியின் வலிமை முழுவதையும், படிமம், உவமை எதுவுமின்றிக் காட்டிவிடுவதில் முழுமையான வெற்றியடைந்து விடுகிறார்.

மகிழ்ச்சி, ஏக்கம், அழகுக் கிளர்ச்சி ஆகிய மனித உணர்வுகளையெல்லாம், சமுதாய உணர்வு உவமைகளால் அகவெளி பீட்டுச் சித்திரங்களாகக் கவிஞர் படைக்கிறார். இதுவொரு சிறந்த உத்தி. அதிலும் ஒரு பகுதி மக்களின் தற்கால வேட்கையை, காதல் இன்ப வேட்கைக்கு உவமை கூறும் போக்கு புதுமையாக உள்ளது.

சங்க காலத் தலைவனுடைய காதலில் புகழ்ச்சியிருக்கும். ஆனால் இப்படித்தான் பேசப்பட வேண்டும் என்ற விதிப்படி தான் அவன் பேசுவான். பொங்கும் உணர்ச்சிக்குப் புதிய சொற் கால்வாய் அமைத்துக் கொள்ளமாட்டான்.

உலக இன்பத்தைச் சிற்றின்பம் என ஒதுக்கிக் கற்பனையான தெய்வ நாட்டத்தைப் பேரின்பம் என்ற நாட்டில், இந்தப் போலிக்கற்பனையை ஒழிக்கப் பாரதி “எத்தனை கோடி இன்பம் வைத்தாய்” என்று பாடினான். தனது மூதாதையை மிஞ்சிவிடுகிறார் மீரா:

என் மூதாதை ஒருவன்
பராசக்தியிடம் வரம் கேட்டான்.
காணி நிலம்