பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

நா. வானமாமலை



இரையாகும் ஏகாதிபத்தியத்தின் கொடுமைக்கு
ஓர் சிற்றரசைப்போல்
வாடி வருந்தும் என் மேனியைப் பார்

‘காலங்கழித்து வராதே’ என்று கூறும் காதலன்,

வாசலில் தின்றவாறு
வீட்டையே நோக்குகிறேன்
எல்லையில் நின்றவாறு
நாடுகடத்தப்பட்ட ஒரு தேசாபிமானி
தன்நாட்டை ஏக்கத்தோடு பார்ப்பதைப் போல!

‘சில்லான் கைதி’ என்ற பைரனின் கவிதையும், ‘லஜபதிராய் பிரலாபம்’ என்ற பாரதியின் கவிதையும் தேசாபிமானியின் ஏக்கத்தை வருணிக்கின்றன. ஆனால் எல்லையில் நின்றவாறு, “தன் நாட்டை ஏக்கத்தோடு பார்ப்பதுபோல” இவை ஏக்கச் சித்திரத்தின் வளர்ச்சியைக் காட்டும் அழகுக்கோடுகள்:

புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின்
கூட்டுப் பண்ணைகளைப்
படங்களில் பார்த்து மலைக்கும்
ஓர் இந்திய உழவனைப்போல் வியப்படைகிறேன்.

உழவனது பண்ணை ஏக்கம் (land hunger) பல முற்போக்கு நாவல்களின் கலைப்பொருளாகியுள்ளது. இங்கு ‘நில ஏக்கம்’ பிடித்த ‘இந்திய உழவன் கூட்டுப்பண்ணைகளைப் படங்களில் பார்த்து’ மலைக்கிறானாம். இது அவனது நில ஏக்கத்தைச் சமுதாய உணர்வாக உயர்த்தி, துண்டு நிலத்துக்குப் பதிலாக அவன் அடையவேண்டிய சமுதாய உயர்வின் குறிக்கோளாகச் சோவியத் பண்ணையைக் காட்டி, அந்த உன்னதமான சமுதாய ஏக்கத்தை, வேட்கையைக் காதலியின் அழகைப் பார்க் கும்போது காதலன் உள்ளத்தில் எழும் மலைப்புக்கு உவமையாகக் குறிக்கிறார்.

இக்காதலின் முடிவு சோகமாகத்தானே இருக்கவேண்டும். இது சமூக ‘விதி’யை மீறிய மனித உணர்வல்லவா; பண மதிப்பை மீறுகிற மனித உணர்வின் எழுச்சியல்லவா? எனவே இதற்கு ஒர் அகால மரண முடிவு உண்டு. இராவணன் மரணம் போல, முத்துப்பட்டன் மரணம் போல, சாக்ரடீசின் மரணம்