பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையில் புதிய போக்கு

75

போல, ஜூலியஸ் ஃப்யூசிக்கின் மரணம்போல, சாக்கோவான் செட்டியின் மரணம்போல, பகத்சிங்கின் மரணம்போல, பாலுவின் மரணம் போல காம்பீர்ய நாதத்தோடு முடிக்கிறார் கவிஞர். இம்மரண காம்பீர்யம் மனித உணர்வுகளை வாழ வைப்பதற்காக, மனித விரோத மதிப்புக்களைத் தகர்க்கும் சமுதாய விடுதலைப் போராட்டமாக, மனித மதிப்புக்களை மட்டும் அடிப்படையாக Everything for man என்ற மனித சாசனப் பிரகடன முழக்கமாக, நமது உள்ளத்தைத் துடிக்கச் செய்கிறது.

நான் புறப்படப்போகிறேன்
என்று தெரிந்ததும்
என் நேயர்கள் எல்லோரும்
என் அருகில் வருத்தமாக நிற்கிறார்கள்;
ஜனசக்தியின் ஒளியில் அரும்பி
ஒரு மகாகவியாக
மலர்ந்து கொண்டிருந்த நீ
இடையில் இப்படி
ஒரு பலவீனத்தின் கரம்பட்டுக்
கருகிவிட்டாயே!
அந்தப் பாதையிலே வளர்த்த
வசீகரமான கனவுகளையும்
கற்பனைகளையும்
விட்டுச் செல்லுகிறேன்.

பண மதிப்பும் ஆதிக்க மதிப்பும் சமூக நியதிகளாகவுள்ள சமுதாயங்களில் இச்சோக ஓலம் காலம் காலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்மனித உணர்வுகளே கவிதைகளாகின்றன. மனித இதயங்களை ஊக்குவிக்கின்றன.

மனித உணர்வின் இனிமையான, நளினமான காதல் வேட்கை, காதல் கனவு இவற்றால் ஏற்படும் கற்பனைகளே நுண்கலைகளின் பொருள்.

இது மரணத்தில்கூட, காம்பீர்யமான மனித கீதத்தோடு கண் மூடுகிறது. உலக மக்கள் பண மதிப்புடைய சுரண்டல் சமுதாயத்தை நொறுக்கி, அதனிடமிருந்து ‘மனிதனுக்கே எல்லாம்’ என்ற முழக்கத்தைப் பொறித்த கொடியேற்றிச் சோசலிசச் சமுதாயத்தைப் படைக்கிறபோது, மிகச் சிறந்த மனித மதிப்பின் வெளிப்பாடான காதல், இயேசு புத்துயிர் பெற்றது போலவும், அதற்கு முன் பருவத் தேவதையான ஆஸிரிஸ் ஆண்டுதோறும் இறந்து மறுபடியும் பிழைத்தது