பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கம்யூனிஸ்டும் கவிதையும்

“பரிணாமன் முதலில் ஒரு கம்யூனிஸ்டு, பிறகுதான் அவர் கவிஞர்” என்கிறார் மீரா. சதங்கையில் பரிணாமன் கவிதைகளைப்பற்றித் தமது அலட்சியக் கருத்துக்களைச் சிதறி வைத்திருக்கும் இராஜமார்த்தாண்டன் “பரிணாமன் கம்யூனிஸ்டு என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் பல கவிதைகளில் அவர் கவிஞர் என்று காட்டிக்கொள்ளவேயில்லை” என்றெழுதுகிறார்.

மீரா எழுதிய வாசகத்திற்குப் பொருள் உணர முடியாத இவர், சாதாரணத் தர்க்கவாதங்களைக்கூட அவரது மனம் கோணுகிற வழியில் கண்டு எழுதுகிறவர், கருத்தைப் புரிந்து கொள்ளாமலேயே தாக்குதல் தொடுக்கும் ‘நேர்மை’யுள்ளவராகத் தோன்றுகிறார். உதாரணமாக, “உறவு முறையில் வைத்துச் சொல்லுவதானால் பரிணாமன் பாரதியின் மகன்” என்று மீரா சொல்லுகிறார். இதைப்பற்றி விமர்சக நீதிபதி என்ன சொல்லுகிறார் தெரியுமா? “கவிஞன் மகன் கவிஞனாகத் தான் இருக்கவேண்டுமா என்ன” என்று கேட்கிறார்.

தமிழ்க் கவிதையின் உள்ளடக்க வளர்ச்சி முறைமையில் பாரதியின் மரபைப் போற்றி, அரை நூற்றாண்டுத் தமிழகச் சமுதாய உறவுநிலை வளர்ச்சிகளை அறிந்து பாரதியின் இலக்கிய உள்ளடக்க, வடிவ மரபுகளை அவர் கவிதை மரபு வழியில், அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து முன்னேறுகிறார் பரிணாமன் என்ற கருத்தில் மீரா இப்படி எழுதினார் என்று கூட, கவிதைபற்றி மீராவுக்கும் பரிணாமனுக்கும் போதிக்க வந்த புதுக்கவிதை விமர்சன மேதைக்கு விளங்கவில்லை. மகன் என்பதை எப்படி இவர் பொருள் கொண்டுள்ளார் என்பதைப் பார்த்தால், கவிதையையே இப்படித்தான் காண்பார் என்று நினைத்துச் சிரிப்பு வருகிறது.

முற்போக்கு, பிற்போக்கு என்ற சொற்களைக் கவிதை வடிவங்களுக்குப் பொருத்திக் கவிதையளவில் பிற்போக்காகப் பரிணாமன் இருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்.

இது குரோத விமர்சனம் என்பது முதலில் “கம்யூனிஸ்டு என்பதில் சந்தேகமில்லை” என்ற சொற்களை ‘சாட்சியங்களால் இவன் கொலையாளி என்பது சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருப்பதால் இவனுக்கு நான் தூக்குத் தண்டனை விதிக்கிறேன்’ என்று கூறுகிற கோர்ட்டுகளின் வாசகம்போலக்