பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நா. வானமாமலை

கூறுகிறார். அதுவே கம்யூனிஸ்ட், கம்யூனிசம் என்றால் உடனே இவரது துவேஷம் அறிவைப் பொசுக்கிவிடும் என்று நன்றாகவே விளக்குகிறது. கவிதையை இவர் துவேஷக் கண்ணாடியின் வழியாகவே காண்கிறார். இவர் கவிதையின் உள்ளடக்கம், அதன் வெளியீட்டு வடிவம் ஆகிய இவையிரண்டையும்: சம்யோகமாக்கி, இரண்டை ஒன்றாக்குகிற ரசவாத அழகியல் முறை பற்றியும் கூறி, அவற்றிற்கெல்லாம் புறம்பாகப் பரிணாமன் கவிதையுள்ளது என்று விவாதித்திருந்தால், இவர் பரிணாமனுக்கு எதிராகத் தீர்ப்பளித்திருந்தபோதிலும் நான் இவர் நேர்மையையாவது ஒப்புக்கொண்டிருப்பேன். ஆனால் இவர் “கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரகன் என்ற நிலையிலேயே(பரிணாமன்) நின்றுவிடுகிறார்” என்று கூறுகிறார். ஒரு கவிஞனை மதிப்பிட முயலும் விமர்சகன் அல்லது ஆய்வாளன் அளவுகளை வாசகனுக்கு அறிவிக்கவேண்டாமா? தமிழ்நாட்டு விமர்சகத் தலையாரிகள் அப்படியொன்றும் செய்வதில்லை. கவிதை, கலை வெளிப்பாடு; அது உருவாகிற போது பின்பற்றக்கூடிய அழகியல் விதிகளை, ஆனால் கவிதையை விமர்ச்சிக்கும்பொழுது, காரணகாரிய நியாய தர்க்க முறைகள், சிந்தனையை வழிப்படுத்தவேண்டும். இவை இந்த விமர்சகரின் எழுத்தில் காணமுடியவில்லையே.


பரிணாமன் பல்கலைகழகத்தினுள் நுழையாதவர். வீடு கட்டும் கொத்தனார். தாமே கற்று, நாட்டு பாடல்களைக் கேட்டு பழகி, தொழிலாளிகளின் வாழ்க்கையை வாழ்ந்து, அறிந்து, அந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் பாட ஆரம்பித்தார். தொழிலாளியின் வாழ்க்கையுணர்வுகளையும் உலகில் முன்னேறிய தொழிலாளிகளின் முன்னேறிய உணர்வான சோசலிச உணர்வோடு இணைத்து, அனுபவத்தையும் இலட்சிய ஆர்வத்தையும் பிணைத்துத் தமக்குக் கைவந்த உருவங்களோடு ஐக்கியமாக்கிக் கவிதையாகப் பாடினார். உணர்ச்சிமிக்க உள்ளடக்கத்தைப் பாடல்களாகவும் சித்தனையும் உணர்ச்சியும் ஏகதேசமாகக் கலந்த உள்ளடக்கத்தைப் ‘புதுக்கவிதை’களாகவும் எழுதினார். நாட்டுப் பாடலின் உயிர்த்துடிப்பும் காப்பியக் கவிதையின் சிறப்பு அமைப்பு முறையும் புதுக்கவிதையின் சுதந்திரப் படிமப் பிரயோகங்களும் அவரைக் கவர்ந்தன.

தொழிலாளி, உழைப்பாளிகளுக்குச் சொல்லவேண்டிய செய்தியை (Message) அவர் பிசிறற்ற பாட்டாகவே பாடுகிறார். படித்தவர்களைச் சிந்திக்கத் தூண்டப் புதுக்கவிதை புனைகிறார். இப்படித்தான் பாடவேண்டும், இதைத்தான்