பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நா. வானமாமலை



விஞ்ஞான வளர்ச்சியால்
விளைகின்ற பயன்கள்
விண்ணை முட்டும்
ஆயிரம் ஆலைகள்
அணுமின் சக்தி
யந்திரக் குலங்கள்
அரசின் கேந்திர
அறிவாளிக் கூட்டம்
சுரங்கப் பொருள்கள்
தோண்டிடும் தங்கம்
கனிவளத் தாதுகள்
கடல்படு திரவியம்
சுதந்திர வியாபாரம்
சொக்கட்டான் அரசியல்
சொந்தம் எழுபத்து
இரண்டு மனிதர்க்கு
ஓடிவாருங்கள்
ஓட்டுப் போட்டிட
ஓட்டு முடிந்ததும்
உற்பத்தி பெருக்குங்கள்.

ஆளுகிறவர்களின் மாய்மாலத் திரையை, ‘உற்பத்தி பெருக்குங்கள் என்ற’ பிரசாரத்தின் போலித்தனத்தை, உற்பத்தி பெருகி, செல்வம் பெருகி, யாருடைய சொத்தாகிறது என்ற உண்மையை மறைக்கிற அரசியல் மூடுபனியை, எப்படி உண்மையெனும் ஒளியால் ஆவியாக்கிவிடுகிறான் கவிஞன். கடைசி நான்கு வரிகளில் அங்கதம் எப்படி வலுவாக ஒலிக்கிறது? “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்றான் புதுயுகக் கவிஞன்.

ஏமாற்றப்படுகிற இந்திய மக்களுக்கு, ஏமாற்றின் உண்மை நிலை புரிகிறமாதிரித் தெளிவாக எழுதிவிடுகிறானல்லவா கவிஞன். இதில் இருண்மையில்லை, படிம உத்தி இல்லை, இறுக்கமில்லை, இன்னும் புதுக்கவிதையின் விலங்குகளான மரபற்ற மரபு இலக்கணத் தளைகள் இல்லை. அதனால்தான் இதில் கவிதைப் பண்பில்லை, கம்யூனிஸ்டுப் பிரச்சாரம் இருக்கிறது என்பார், கவிதை விமர்சக மன்னர். ஆனால் இப்படி இருக்கவேண்டும் என்று விரும்புவாரோ?



பிச்சைக்காரியின்
பிள்ளைகள்