பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்யூனிஸ்டும் கவிதையும்

81

பேசத் தொடங்கும் முன்னையே விரைத்துச் சாகும். பசிக்கு வழிசொல்ல பாஷையின்றி இந்தக் கவிதை பேசத் தொடங்குமுன் வீசியெறிவாள். இந்தக் கவிதை உங்களுக்கும் புரியாமலே போகட்டும்!

இதிலே உங்களது கவிதை இலக்கணத் தேவைகளெல்லாம் பூர்த்தியாகியுள்ளதா?

பசியைப்பற்றிப் பேசி, அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை, இந்தக் கவிதை விளங்காமலே போகட்டும் என்று முடிக்கிறாரே புதுக்கவிதைப் பேரொளி. இதை ஏன் எழுதுகிறார், இதை ஏன் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு விமர்சக மேதாவிகள் வாகைப்பாட்டுப் பாடுகிறார்களோ சிற்றறிவுடைய நமக்கு விளங்கவில்லை. இதிலும் அங்கதம் இருப்பதாக விரிவுரை எழுதுவார்கள். அது இருண்மையாக இருப்பதாகக் கதை விடுவார்கள்.

இருளில், வசியப் பேச்சுக்களைப் பேசிக் குழியில் வீழ்த்தப் பட்டிருக்கும் மக்களை ஏமாற்றுகிற, அவ்வசியப் பேச்சுக்களின் வஞ்சகத்தை எடுத்துக்காட்ட, பச்சையாகக் கவிஞன் உண்மை யைச் சொல்லி, அங்கத உத்தியால், அவர்கள் சொல்லின் ஏமாற்று அந்தரங்கத்தை விளக்கக்கூடாது; கூடாதென்றால் உங்கள் கவிதைகள் விளங்காமலே போகட்டும்.

பசியைப் பற்றியும் பசித்திருப்பவனது பிரலாபங்களைப் பற்றியும் கவிதை எழுதி, அக்கவிதை வீசியெறியப்படும், அது விளங்காமலே போகட்டும் என்ற கவிதையோடு பரிணாமனது பசி பற்றிய இரண்டு பகுதிகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்:

தொட்டிற் சனியன் தொடர்ந்தே அழுதது தூங்கிய மனிதர்கள் சலித்தனர் வட்டில் நோயால் தாயும் சேர்ந்தழ வறுமை நோய்க்கு மருந்துகள் உண்டோ

பசி, உணர்வை அழிக்கிற கொடுமையைக் கூறிய கவிஞர் அதனோடு விட்டிருந்தால், புதுக்கவிதைக்காரரின் பசி ஓலத்திற்கும் இதற்கும் வேறுபாடில்லை என்று கூறிவிடலாம். ஆனால் பரிணாமன் பசிக்குக் காரணமான தனியுடைமைச் சமுதா