பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்யூனிஸ்டும் கவிதையும்

85

தால் அவையனைத்தையும் முறியடிக்க இப்படையின் தத்துவம் நிரம்பிய கவிதை அக்கினியஸ்திரங்களால் முடியும்.

உலக முதலாளித்துவ அமைப்பை மூழ்கடிக்கக் கிளம்பிய மாபெரும் தொழிலாளர் இயக்கமும் கம்யூனிஸ்டு இயக்கமும், உலகில் சிறந்த அறிவியலாளரிடையேயும் கவிஞர்களிடையேயும் தனது தத்துவப் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களது படைப்புகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இன்று மட்டுமல்ல. ஜெர்மனியில் பாசிசம் தலைதூக்கிப் பல புரட்சிகளைக் கண்ட பிரான்சின்மீது பாய்கிறபோது ரொமெய்ன்ரோலந்து என்ற புகழ்பெற்ற நாவலாசிரியர், தம் நாட்டு எழுத்தாளர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். உலகிலுள்ள பாசிச எதிர்ப்புச் சக்திகள் விடுதலைப் போராட்டச் சக்திகளோடு இணைந்து நின்று பாசிசத்தையும், அதை வளர்த்துவிட்ட உலக முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடும் உலக உழைப்பாளி மக்கள் படைக்குக் கட்டியம் கூறவேண்டுமென அழைத்தார். அப்பொழுது பிரெஞ்சு எழுத்தாளர்களில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் பாசிச —முதலாளித்துவ எதிர்ப்பணியில் இணைந்து கவிதையை இயந்திரத் துப்பாக்கிகளாக்கிப் போராடினர். அக்காலத்தில், பாசிசம் பற்றிய கொள்கைக் குழப்பங்களை நீக்குவதற்கு உலக முற்போக்கு எழுத்தாளர்கள் தமது இலக்கியப் படைப்புகளை அர்ப்பணித்தனர். இக்காலத்தில்கூட உலக அரங்கில் போராடும் இரண்டு சக்திகளுக்கிடையே தமது அணியை நிர்ணயித்துக்கொள்ள முடியாத இலக்கியப் படைப்பாளிகள், அகமன உளைச்சல்களைப் போராடவிட்டுப் பார்த்து ரசித்து, உலகைவிட்டே விலகிப் போகின்றனர்.

பாசிசம் வெற்றிமேல் வெற்றிபெற்ற காலத்தில் ரொமெய்ன்ரோலந்தின் தீர்க்கமான குரலும், மாக்சிம் கார்க்கியின் தெளிவான குரலும் இணைந்து ஒலித்தன. மாக்சிம் கார்க்கி கம்யூனிஸ்டு. ரொமெய்ன் ரோலந்து கம்யூனிஸ்டல்லர். ஆனால் கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து நின்று பாசிச அபாயத்தையும் உலக முதலாளித்துவச் சதிகளையும் எதிர்த்துப் போராட எழுத்தாளர்களைத் திரட்ட முன் வந்தார். அக்காலத்தில் இக்குரல்களுக்குச் செவிசாய்த்து உலகப் போரணிகளில் தமது ஸ்தானங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களை உலகம் இன்று நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறது. உலக மக்களின் சுதந்திரம், பாசிச அடிமை வாழ்க்கை என்ற இரு வருங்கால நிலைமைகளுக்காக நடந்த உலகப் போரில், அணி சேராதவர்களும், ஒரு நிலைமையென்ற பெயரால் மக்கள் அணியில் நிலைத்து நிற்காதவர்களும் அச்சமயம் உள்ளங்களுக்குள்