பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

நா. வானமாமலை

அந்த

புதிய யுகத்தின் புலன்களை வருடவரும்!

புதுக்கவிதைக்காரரது ௸ண வாழ்க்கைத் தத்துவம், மனித குலத்தின் நீண்ட வரலாற்றைப்பற்றி அறியாமை, தற்கால உலக மக்களின் நல்வாழ்வுப் போராட்டம், இப்போராட்டத்தில் தத்துவ மோதல்கள், இவ்வுலகச் சூழல்களிடையில் தனது ஸ்தானம்—இது எவை பற்றியும் சிந்திக்காமல் சொற் சேர்க்கை, படிம உத்தி, இருண்மை, பழமை யாப்பு உடைப்பு முதலிய சில்லறைச் சாகசங்களில் பொழுதைப் போக்குகிற வடிவ ரசனைவாதிகளான புதுக்கவிதைக்காரர்களுக்குப் புதுக்கவிதைக் கடுகுதான் கண்ணுக்குத் தெரியும். அதிலே அவர்கள் தங்களுடைய தனித்துவத்தைக் கண்டுகொள்ளுகிறார்கள். மனித உணர்ச்சிகளின் முரண்பாடுகளையும் மனித சிந்தனைகளையும் தத்துவ மோதல்களையும் உள்ளடக்கிய உலக சமுதாயமென்னும் சமுத்திரத்தை அவர்கள் அறியமாட்டார்கள். மதத்தை ஒழிக்கக் கிளம்பி, ஒரு புதிய மதத்தை ஸ்தாபித்தவனைப்போல, பழைமையின் யாப்பு மரபை ஒழிக்கத் தொடங்கி, ஒரு புதிய இறுக்கமான ‘புதுக்கவிதை’ மரபுகளை உருவாக்கி, அவற்றையே கடினமாக்கி, கூட்டுச்சிறையிலிருந்து தூக்குத் தண்டனை பெற்றுச் சிறைக்கு வந்து ‘பழைமையிலிருந்து அது எவ்வளவு வேறுபட்டது’ என்று அச்சிறை வாழ்க்கையைச் சகித்துக்கொள்ளும் தனிமைவாதப் புதுக்கவிதைக்காரர்களுக்குப் பரிணாமனது அகலமான — உள்ளடக்கம் பொதிந்த கவிதைகளை எப்படி ரசிக்க முடியும்?