பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

நா. வானமாமலை

மனித சக்தியில் நம்பிக்கையின்மை, சாதாரணத்துவமே வெற்றி பெறுகிறது என்ற அங்கலாய்ப்பை ‘சிருஷ்டி’ என்ற க. நா. சு. கவிதையில் காணலாம்;

அலுத்துப்போய்
கண்களிலே குருட்டுத்தனமும்
மனத்திலே ஒரு சிந்தனையில்லாமையுமாக
முத்திரைகளிலே முடிவு காட்டும் சக்தியும்
நடையிலே பெருமிதமும்
சொற்களிலே அடைமொழிகளுமாக
போக்கிலே சாதாரணத்துவமாக
ஒரு மனிதனை நடமாட விட்டேன்
அலன் எண்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்
அதில் முப்பது ஆண்டுகள் அறிஞனாகவும்
இருபது ஆண்டுகள் பேரறிஞனாகவும்
பதினைந்து ஆண்டுகள் மத்திரியாகவும்
நடமாடினான்.

படைப்பிலேயே சிறந்தவன், உயர்ந்தவன் என்றும் படைப்பிலேயே சாதாரணமானவன், வெளிப்பகட்டின்றி, பாமர மக்களைக் கவரும் இயல்புகள் வாய்ந்தவன் என்றும் இருவிதமாக மக்களைப் பிரித்து, சாதாரணத்துவம் வெல்லுகிறது என்றும் தனிமனிதத்துவ உயர்வுக் கொள்கை தோற்றுப் போகிறது என்றும் கண்ணீர் வடிக்கிறார் கவி. மனிதத்துவ மகத்துவத்தைச் சீர்குலைக்கும் பல கருத்துக்கள் தொகுப்பில் உள்ளன.

மனித இனம் தனக்குள்ளே போரிட்டு அழியும் என்ற இருத்தை க. நா. சு. ‘விஜயதசமி’ என்ற கவிதையில் வெளியிடுகிறார்:

மகிஷம் என்ற மனிதன்
மாயமறுத்து
மீண்டும் உயிர்பெற்றெழ
யுத்தம்
வரும்
வரும்
கனன்று அலுப்புற்று
இந்த விஜயதசமி அன்று
மகிஷம் என்கிற மனிதனை
மணந்து கொண்டு விட்டாள்