பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதை-பழமையும் புதுமையும்

91

இனி யுத்தம்
ஒன்பது நாட்களுக்கு மட்டுமல்ல.

எவ்வளவு மனித வெறுப்புக் கவிஞனுக்கு. யுத்தத்தை மனிதன் மணந்துகொண்டு விட்டானாம்!

‘மனித மேன்மை’யைச் சீரழிக்கிற இக்கவிஞர்கள என வேட்டை, இந்த மாடுகள், நிழல் வேட்டை போன்ற அற்பமான கருக்களைக் கவிதையாக்குகிறார்கள். கருவில் பழைய சிலேடைக்காரர்களை நினைவூட்டுகிறார்கள். ஏதோ அற்பமான ஒரு விஷயம்பற்றி மனம்போன போக்சில் தோன்றுவதையெல்லாம் எழுதுகிறார்கள். தொடர்பாகச் சிந்திப்பது மரபு. தொடர்பில்லாமல் சிந்திப்பது மரபு மீறல். வண்ணாத்திப் பூச்சிகள், ஆமை, இவர்கள் என்று மூன்று கவிதைகளை ஒரு புகழ்பெற்ற புதுக்கவிஞர் படைத்துள்ளார்.

இதன் செய்தி (message) என்ன? வாசகன் எதை உணர வேண்டும் என்று கவிஞர் ஆழ்ந்து உணருகிறார்?

உண்ணுள்ளிப்பிள்ளைக்குக் கண் வலி; நவீனன் செத்துப் போகிறான்; கேசவமாதவன் ஊரில் இல்லை; சிவனைப் பற்றித் தகவல் இல்லை. இறந்தவன் சாகுமுன்னர் தங்களிடம் சொல்லியிருந்தபடி அவன் நண்பர்கள் நீளமாக ஒரு குழி வெட்டி அவனை அதில் தலைகீழாக நிறுத்திவைத்து அடக்கம் செய்து விட்டார்கள். இனிக் கவிதை வரிகளையே தருவோம்:

எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப்பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.

இவையெல்லாம் என்ன? நவீன சர்ரியலிசத்திற்கு ஓர் உதாரணமா? ஏதாவது தொடர்ச்சியான சிந்தனையிருக்கிறதா? ஒரு காட்சி, ஓர் இலை, ஒரு காய், ஒரு சிற்றோடை, ஒரு குயில், ஒரு பெண், ஒர் ஆண் இவற்றில் இருந்து தொடங்கிய சிந்தனை, மனநிலத்தின் வழியோடிப் பெரிய பிரவாகமாக உணர்ச்சிகடலை அடையலாம்.To the Skylark, Nightingale, On a Grecian urn, குயில் பாட்டு போன்றவை. ஓர் அடிமையின் கனவு-உழைத்து உழைத்து எஜமானனுடைய கொடுமைகளுக்கு உள்ளாகி, கசையடிபட்டு அகன்ற வயல்களின் கரையிலே சாகக்கிடக்கும் அடிமை கனவு காண்பதாக லாங்க்ஃ பெல்லோ எழுதிய கவிதை, சாகக்கிடக்கிறவனுடைய ஆர்வம், சுதந்திர ஆர்வமாக, தன்னாட்டில் மன்னனாக வாழ்ந்து,