பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

நா. வானமாமலை

காதலித்து மண்ணைக் கிளறிய கனவாகத் தொடர்ச்சி குன்றாமல் வருணிக்கிறது. உலக மகா கவிதைகள் எங்கே, புதுக் கவிதை எங்கே? இதில் புதுக்கவிதை இலக்கணக்காரர்கள் விரும்புகிற இருண்மை இருக்கலாம். அழகியல் ரசிகன், சோகத்தைக்கூட ரசிக்கக்கூடிய திறமையுடையவன். கண்ணும் மூக்கும், உள்ளத்தின் ஜன்னல்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு நமது உணர்வுப் பாதைகளில் அருவருப்பை ஏற்றுகிறது.

‘ஆமை’ பற்றி அடுத்த கவிதை. படிமங்கள் எல்லாம் அருவருப்பைத் தோற்றுவிப்பன:

உடம்பு முழுவதும் ஒரு கொட்டாங்கச்
சிக் கூரை; விகாரமாக வெளித்
தெரியும் துளிக்கால்கள்; எட்டிப்
பார்க்கும் பாம்பு மூஞ்சி.

இவ்வளவுபோதும், மூன்றாவது கவிதை இவ்விரண்டு கவிதைகளின் தொடர்ச்சியாம். பிணமும் ஆமையும் கவிஞன் அறிந்த மனிதர்களது குனதோஷங்கள்; நம்மில் தோற்றுவிக்கும் அருவருப்பின் உருவங்கள். சுயநலமும் வஞ்சகமும் இவர்களது பண்புகள். உடைமை மோகம் இவர்களது வெறி, சாகிற வனைப் பார்த்து, ‘இவன் ஏன் இன்னும் சாக மாட்டேன் என்கிறான்’ என்று பொறுமையிழந்து நிற்கிறார்கள். இவர்கள் தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

இவர்களுடன்தான் உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் உலகில்தான் இவர்களும் வாழ்கிறார்கள்.

ஆனால் ஒன்றும் சேதமில்லை
இன்றும் பூதங்கள் மனிதனைக் கண்டு
சிரிகின்றன. அது ஒன்று போதும்.

முதல் இரண்டு படிமங்களை வெறுப்புக் கொப்புளிப்பதற்காக உருவாக்கிய கவிஞன், அதே உணர்ச்சியை மனிதன் மீதும் செலுத்துகிறான். இவனது சொந்த அனுபவம் உணர்த்திய குறுகிய மனித இனம், மனிதத்துவம் கெட்டதாக இருக்கிறது. இதையே முழுமையான மனித இனம் எனக் கருதிச் சாபம் விடுகிறான் கவிஞன். ‘மனித உடல் பூதங்களால் உருவானது’ என்ற பழைய தத்துவக் கருத்தை மனதில் கொண்டு அவை மனிதனை நோக்கிச் சிரிப்பதாகக் கவிஞர் கூறித் திருப்தி அடை-