பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


புது வருடம் பிறந்தால், பொங்கல் வந்தால், பழையன கழிக்கப்படுகின்றன, ஒருநாள் கூத்துக்கு உச்சகட்ட இன்பம். தலை தாங்க முடியாத பெருமை. தினம் தினம் இப்படிச் செய்கிற ஒன்றை, நாம் எப்படி எண்ண வேண்டும்? தெய்வம் போல் கொண்டாடி, தொழுது போற்றி வாழ வேண்டாமா?

இலையுதிர் காலம் என்று இருப்பது போல, நாம் தேகத்திற்கும் தினம் தினம் பழையதைக் கழித்துப் புதுப்பிக்கின்ற பக்குவமான பணிகள் இருக்கின்றன.

நமது தேகம் எத்தைகைய மகத்தான பணிகளை ஆற்றுகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும், தேகத்திற்குப் புதுமை படைக்கவும். புத்துணர்ச்சி கொடுக்கவும், பேரின்பம் அளிக்கவும் மேற்கொள்கிற மகத்தான் முயற்சிகள்தான் புதியன புகுத்தி, பழையன கழிக்கும் செயல்களாகும். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு பார்க்கலாமே.

இரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் என இரண்டு வகை உடலைக் காக்கும் உயிர்ச் சத்து அல்லவா இந்த அணுக்கள். இவை புதிதாகப் பிறந்தால் தானே புதுமையும் புத்துணர்ச்சியும்.

ஒவ்வொரு நாளும் 200,000,000,000 சிவப்பு அணுக்கள் பிறக்கின்றன. அவை 110 முதல் 120 நாள் வரை உயிர் வாழ்ந்து, முழுதுமாக மடிந்து போகின்றன. பழையன கழிந்ததும் புதியன புகுகின்றன. நம்மை அறியாமல்; நமக்குத் தெரியாமல், வெள்ளை அணுக்கள் எல்லாம் 9 நாட்களே வாழ்ந்து, உடலைக் காத்து மறைகின்றன. பிறகு புதிதாய் பிறக்கின்றன.