பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

113


115. உள்ளங்கை

தூங்கி விழிக்கிற ஒருவர், கண் திறந்ததும், தனது உள்ளங்கைகளை பார்ப்பதும், சூடுபறக்கத் தேய்த்துக் கொள்வதும்; துதித்துக் கொள்வதும் என்ற காரியங்களைச் செய்வது, பண்பாட்டுப் பழக்கமா அல்லது பாரம்பரிய வழக்கமா என்பது தெரியவில்லை.

பெரியவர்கள் செய்வதைப் பின்பற்றி, மற்றவர்கள் செய்கிறார்கள் என்று தான், பார்க்கிறவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

உள்ளங்கை என்பது, கையின் முடிவில், விரல்களின் முடிச்சுடன் அமையப் பெற்ற பகுதி. கையின் உட்புறத்தை அங்கை என்றும், வெளிப்புறத்தை புறங்கை என்பதும் வழக்கம்.

உள்ளங்கையை அங்கை என்றும், அகங்கை என்றும், குடங்கை என்றும் கூறுவார்கள்.

அங்கை என்பது அழகான கை என்றும்; அகம்கை என்பது அகத்தை வெளிக் காட்டும் கை என்றும் அர்த்தம் அளிக்கிறது.

அதுவே உள்ளங்கை என்கிற போது, உள்ளத்தைக் காட்டுகிற ஒழுக்கம் என்பதாக விரிந்து கிடக்கிறது.

உள்ளத்தின் ஒழுக்கத்தைக் காட்டுகிற கைப்பகுதியாக இருப்பதால் தான், தூங்கி விழித்ததும், கையை விரித்துப் பார்க்கின்றார்கள். தூங்கி விழித்ததும், நல்லதை சிந்திக்கவும், நல்லதைப் பார்க்கவும் கூடிய வாய்ப்பையே உள்ளங்கை வழங்குகிறது.