பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

115


4. மோதிரவிரல் - பூமி
5. சுண்டு விரல் - தண்ணீர்

இயற்கையை நினைவு படுத்தத்தான் 5 விரல்களும் இருக்கின்றன.

காலையில் கண் விழித்ததும், கைகளைப் பார்ப்பதும், விரல்களை நோக்குவதும் ஒன்றே ஒன்றுக்குத் தான்.

இயற்கையைப் போல, மாறாமல் இருக்க வேண்டும். இயற்கையைப் போல காலந்தவறாமல் செயல்படவேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுவதற்காகத்தான் உள்ளங்கையைப் பார்க்கிறோம்.

அப்படிப் பார்க்கிறபோது, இனி தொடரப்போகும் பணிகள் தொண்டாகவும், தூய்மையாகவும் அமைய வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்கிறோம்.

கைகளை சூடு பறக்கத் தேய்க்கிறோம். அப்பொழுது மனதுக்குள் ஒரு அமைதி, ஒரு ஆறுதல் உண்டாவது போல் தோன்றுகிறது. காரணம் - இருக்கிறது.

தீ சக்தி உள்ள கட்டை விரலையும், காற்று சக்தி உள்ள ஆட்காட்டி விரலையும் தேய்க்கிறபோது, ஏற்படுகிற உராய்வில் உண்டாகிற ஒரு காந்த சக்தி, நரம்புகள் மூலமாக, மூளைக்குச் சென்று, அங்கே ஓர் அமைதி சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது.

இது நம்மையறியாமல் நாமே செய்து கொள்கிற சுக காரியம்.