பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

129


தண்ணீரில்லா தாமரை சாம்பிப்போகிறது. அதுபோல, தன்னையறியாதவன் பெற்றிருக்கும் அறிவும், திறமும், ஞானமும், மோனமும், வீணாகிப் போகிறது.

ஆமாம்.... அகத்திலே அகத்தைக் கண்டார்க்கே சுகமும் சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.


125. முகக்கண் - அகக்கண் - சுகக்கண்

கண்ணிரண்டே எல்லோருக்கும். ஆனால் கற்றவர்க்கு இருப்பது மூன்று விழி. அதாவது ஞானம் என்கிற கண் திறந்து கொள்கிறது.

ஆனால், இரக்கப்பட்டு, பிறர்க்குக் கொடுக்கின்ற பேர்களுக்கு ஏழு கண்கள், அதாவது 2 முகக் கண்கள், ஐந்து நகக் கண்கள். ஆனால், தவவலிமையால் அருள் ஞானம் பெறுகின்றவர்க்கு. அனந்தம் விழி என்று நீதி வெண்பா பாடுகிறது.

பார்ப்பதற்காகப் படைக்கப்பட்ட கண்கள். அறிவின் சாளரம். அஞ்ஞானத்தின் சாட்டை. தெளிவின் திறவுகோல், ஆனால், சாட்டை, தெளிவின் திறவுகோல். ஆனால், முகத்தின் கண்கள் சுகத்தைக் கொடுக்காமல், சபலத்தை வார்க்கின்றன. சலனத்தை வளர்க்கின்றன. காமத்தைக் கொடுத்து, சாபத்தை வரவழைத்து விடுகின்றன.

ஆனால், வாழ்க்கைக்கு கண்கள் இல்லாமல் என்ன பயன்? உலகை ரசிக்க, உணர்வுகளை ஏற்படுத்த உதவும். கண்களால் ஒருவருக்கு எப்பொழுது சுகம் ஏற்படும்?