பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


‘முகத்தில் கண் கொண்டு பார்க்கும் மூடர்காள் அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்’ என்று தமிழ்ச் சித்தர் திருமூலர் வழி காட்டுகின்றார்.

அகத்தில் கண்கொண்டு எதைப் பார்ப்பது என்ற கேள்விக்கும் அருமையான விடையைத் தருகிறார். தன்னைப் பற்றி, தன் நிலையை, வாழும் சூழ்நிலையை, அமைந்திருக்கும் உதவி முறைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதெல்லாம் அகக் கண்ணால் மட்டுமே முடியும் என்கிறார்.

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை!
தன்னை அறியாமல் தானே கெடுகின்றார்!
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்!
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தேனே!

என்கிறார் திருமூலர்.

வாழ்க்கையின் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் மூலமாக விளங்கும் தேகத்தை அர்ச்சிப்பதுதான், சுகம் பெறக்கூடிய சுருக்கு கூறியதால்தான் சித்தர் ஆனவர் மூலர் ஆனார். பிறகு திருமூலர் ஆனார்.

ஆகவே, சுகக்கண் பெற, முகக்கண் மூடிய அகக்கண் வேண்டும் என்கிறார் இன்னொரு சித்தர். அவர் பெயர் காரைச்சித்தர்.


126. சாமியும் ஆசாமியும்

உயர்திணையாக உலா வருகிறவர்களை மனிதர் என்று அழைப்பது சம்பிரதாயம்.

அவர்களை மேலும் உயர்வாக சாமி என்று அழைப்பது மேலும் உயர்வாக மதிக்கின்ற சந்தோஷம்.