பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காவியணிந்தவர்கள் மட்டுமே புனிதர்கள் என்பதில்லை.

கடமை, கருணை, கொடை, பண்பு, நியாயம், தர்மம் உள்ள எல்லோருமே புனிதர்கள்தான்.


15. மனிதருக்குரிய அழகு

அவரவர் அன்றாடம் செய்து வருவது செயல், இந்தச் செயல் உடனே முடிந்து விடாமல் தொடர்ந்து ஒரு பயனைத் தந்து கொண்டிருந்தால் அது வினை.

அந்த வினை அவருக்கு நல்ல முடிவைத் தந்து, நலம் பயக்கும் பயன்களைத் தந்தால் அது நல்வினை.

அவரது உடலை அழித்து, வாழ்வையும் வற்றிவிடச் செய்யும் வேகம் கொண்டிருந்தால் அது தீவினை.

நல்வினைகள் பலர் அறிய நடந்தால் அது நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியே சமுதாயத்திற்கு உதவி, சகலருக்கும் வழிகாட்டுதலாக அமைந்தால் அது வரலாறு.

மனிதர்களாக வாழ முயலவேண்டும்.

அதுதான் ஆறறிவு படைத்த மனிதர்க்கு அழகு.


16. சிந்தனையின் சிலிர்ப்பு

பட வயதும் உடலும் முதிர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டே இருக்கிறோம் என்பது தானே அர்த்தம். முடிந்து போவதற்குள் வந்து போன