பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

21


அடையாளத்திற்காக நாம் ஏதாவது ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய வேண்டாமா? செய்தாகத்தான் வேண்டும். அதுதான் வாழ்க்கை லட்சியம்.


17. வாய்ப்புக்கு வழி

அதிரடியாய் ஒரு எழுச்சி
ஆர்ப்பாட்டமான பெரு வளர்ச்சி
அப்பட்டமாய் பல சூழ்ச்சி
அவமானம் பார்க்காத தாழ்ச்சி
அடிமட்டமாய் போகிற வீழ்ச்சி
அத்தனைக்கும் ஈடு கொடுக்கிற பீடு
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே முடிகிறது
அதனால்தான் அறிவுவாதிகளால் அங்கு
அணுக முடிவதில்லை. நுழைய முடிவதில்லை
எதற்கும் தயார் என்கிற இதயம்
இல்லாதவர்க்கு அரசியலில் வாய்ப்புமில்லை.
வாழ்வும் இல்லை.


18. தடம் புரளும் தலைவர்கள்

எஞ்சின் ஓட்ட வேகத்திற்கு ஏற்றாற் போல ரயில் பெட்டிகள் ஓடுகின்றன. தண்டவாளத்தில் எஞ்சின் ஓடுகின்றவரை, பெட்டிகளின் ஓட்டமும் சரியாகத்தான் இருக்கும். எஞ்சின் இறங்காவிட்டாலும் பெட்டிகளும் சில சமயங்களில் தடம் புரண்டு விடுவதும் உண்டு. தலைவர்கள் என்பவர்கள் நீதிகள், நியாயங்கள், நெறிமுறைகள் என்று தங்கள் தொண்டர்களும் தடத்தில்தான் போகிறார்கள். தங்கள் செளகரியத்திற்காக தலைவர்கள் நீதி நியாயங்களை மீறும்பொழுது