பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காட்டுவது போல பாவித்துக் கற்பது சிறப்புக் கல்வி. எல்லாம் சரிதான். இந்தக் கல்விகளையெல்லாம் கற்றுக் கொள்ள உதவுவது உடல், மனம், உயிர் அல்லவா?

உடலை வளர்ப்பது, நோய் வராமல் காப்பது மனத்தை வலிமைப்படுத்துவது, ஆத்மாவாகிய உயிரை வளப்படுத்துவது என்பதைக் கற்பிப்பது ‘உடற் கல்வி’ அல்லவா?

இதை ஏன் இந்த மக்கள் வெறுக்கிறார்கள்? வேண்டாம் என்கிறார்கள்?

ஓட்டைக் கப்பலில் உல்லாசப் பயணம். உலுத்த மரக் கிளையில் உல்லாச ஊஞ்சல் சுடுகாட்டு மண்டபத்தில் சுருதிக்கச்சேரி, மருத்துவ மனைகளில் மரண காவியம்.

இவற்றை விரும்பி வாழ்கிற மக்களைப் பற்றி என்ன சொல்ல? புழுதியிலே புரளும் கழுதைகளுக்கு அதுதான் சுகம்.

பார்த்துக் களித்து விட்டுப் போவதைத் தவிர புலம்பி என்ன ஆகப் போகிறது.


36. எயிட்ஸ்

விளிம்பில்லாத தீர்த்தப் பாத்திரம் என்று தமிழர் எனும் சொல்லுக்கு அர்த்தம் சொல்லுகிறது ஓர் அகராதி.

தீர்த்தம் என்றால் சுத்தம் என்றும், புனிதநீர் என்றும் கூறலாம். புனித நீர் உள்ள பாத்திரத்தில் விளிம்பாகிய கரை இல்லாவிட்டால் நீர்தான் தங்குமா? நிலைமை என்ன ஆகும்?