பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நாம் ஒருவர் மேல் கொள்கிற விசுவாசம் சத்தியமாக, நிஜமாக, உறுதியாக இருக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும்.

அதற்குப் பதில் கூறுவதுபோல்தான் விசுவாசம் என்ற சொல் அமைந்திருக்கிறது.

வி என்றால் அறிவு. சுவாசம் என்றால் உயிர்ப்பு.

உயிர்ப்பு என்றால் உயிர்கை காற்று. மூச்சுக் காற்று மூச்சாவதும், மூச்சு உயிர் சக்தியாவதும், உயிர் சக்திதான் உலகத்தில் வாழ உதவுவதும் உண்மை. சத்தியம்.

அந்த உயிர்ப்பு போல அறிவானதாக, சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதால்தான் சுவாசத்தைக் காட்டி விசுவாசம் என்று அழைத்து மகிழ்ந்தனர் நம்மவர்கள்.


58. ஊழா? வினையா?

கண்ணகியை அழைத்துக் கொண்டு கோவலன் மதுரைக்குச் செல்கிறான். இதை இளங்கோவடிகள் ஊழ்வினை வந்து உறுத்த என்ற மூன்று சொற்களால் விளக்கிக் காட்டுகின்றார்.

ஊழ் என்றதும் ஏதோ கொடுமையானது, பயங்கரமானது என்றெல்லாம் மக்களைப் பயப்படுத்துகிற சொல்லாகவே எல்லோரும் பேசுகின்றார்கள்.

ஊழ் என்றால் முடிவு, (ஒரு) முறை, (ஒரு) விதி, பதனழிதல் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு. இப்படிப்பட்ட வேண்டாத விளைவை உண்டு பண்ணுகிறது எது என்றால் பழவினை என்பார்கள்.