பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

61


என்ற கட்டுப்பாட்டுக்குள் அடங்கியே ஆட வேண்டும். இரண்டுமே மனிதனை மனிதப் பண்புள்ளவனாக வாழச் செய்யவே முயலுகின்றன.


71. கைப்பம்பும் சமுதாயமும்

தண்ணீர் வேண்டும் என்று பம்பை முதன் முதலாக அடிக்கும் பொழுது குழாயில் தண்ணீர் வருவதில்லை.

கொஞ்சம் தண்ணீரை நாம் ஊற்றி விட்டு அடிக்கத் தொடங்கினால் தண்ணீர் வருகிறது.

அதுபோலத்தான் வியாபாரமும். நாம் கொஞ்சமாவது மூலதனத்தைப் போட்டால்தான் வியாபாரத்தையே ஆரம்பிக்க முடியும்.

அதிக லாபம் வேண்டுமென்றால் அதிக மூலதனம் போட்டாக வேண்டும்.

இன்றைய சோஷலிச சமுதாயத்தில் பணக்காரன் தான் பணக்காரனாக முடிகிறது.

ஏனென்றால் நமது சமுதாய அமைப்பு கார்ப்பரேஷன் கைப்பம்பு போலத்தான் அமைந்திருக்கிறது.


72. வலுத்தவனும் அலுத்தவனும்

வலுத்தவன் (வலிமை உள்ளவன்) வசதியோ, பணமோ இல்லாத தன் வாழ்விலும், வலிமையுடன் போராடி, சுகமாக வாழ்கிறான்.

அலுத்தவனோ (கூனிகுறைந்த உடல் உள்ளவன்) வாழ்க்கையில் வசதிகள் பல இருந்தாலும் நோய் களுக்கும் கவலைகளுக்கும் ஆளாகி, அவற்றோடு போராடியே சாகிறான்.