பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இரண்டு சொற்களும் சேர்ந்துதான் அமுதம் ஆயிற்று. முதம் என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம். என்றால் அகத்தையும் புறத்தையும் சுட்டுவது. ஆகவே அகத்தையும் புறத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதே மருந்தின் குணமாகும். உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தும் மேன்மையான பொருளுக்குப் பெயர் காற்று என்பது. அதாவது உயிர்க்காற்று. உயிர்க் காற்றுக்கு மற்றொரு பெயர் மருத்து. மருத்துக்கு ஒரு கடவுள் உண்டு என்பார்கள். அந்த வாயு பகவானுக்கு ஒரு பெயர் மருத்தன். நம் உடலுக்கு வருகிற நோய் உடலுக்குள் காற்றைக் குறைத்து கஷடப்படுத்தி கடைசியில் காலனிடம் கையளித்து விடுகிறது. காற்றை உடலிலிருந்து வெளியே போகவிடாமல் மருத்தைக் கட்டி வைக்கிற மாமனிதருக்குப் பெயர்தான் மருத்துவன் என்பதாகும். மருத்துவன் என்றால் பண்டிதன். பண்டிதன் என்றால் பலவும் கற்ற புலவன். மாமேதை என்பார்கள். ஒருவரைக் காப்பாற்றும் வைத்தியனே பண்டிதன் - அதாவது மருத்துவன் ஆகிறான். ‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் உடைய நோயாளி’ என ஒரு பாடல் உண்டு. இந்தக் காலத்து நோய் தீர்ப்பவருக்கு மருத்துவர் என்பது பொருந்துமா, பொருந்தாதா? பண்புடையவர்க்கே பொருந்தும். பணத்தாசை பிடித்தவர்களுக்குப் பொருந்துமோ!


102. குண்டு சட்டிக்குள்ளே குதிரை

இந்தப் பழமொழிக்கு அர்த்தம் எல்லோருக்குமே தெரியும். ஒரு காரியத்தை, ஓரிடத்திலிருந்து கொண்டே