பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

97


வலிக்குது என்றார். கைத் தாங்கலாகப் படுக்க வைத்தனர். ஒரே கிடப்பாய் அப்பொழுதே இறந்தொழிந்தனர். அப்படி வருகிறது மாரடைப்பு என்று திருமூலர் பாடுகிறார்.

“அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே”

அடப்பண்ணுதல் = பலகாரம் செய்தல்; அடிசில் = உணவு, இடப்பக்கம் = இதயம்; நொந்தது = வலி; மந்தணம் - ஆலோசனை.

மாரடைப்பின் வேகம் இப்போது புரிந்திருக்குமே!


105. பந்தமும் பாசமும்

பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதும் இல்லை. அறுக்கிறதும் இல்லை. சேர்க்கிறதும் இல்லை, காக்கிறதும் இல்லை.

முட்டை இட்டுக் குஞ்சு பொறித்த பிறகு குஞ்சுக்காக இரை கொண்டு வந்து ஊட்டி உடல் வளர்த்து, உயிர்காத்து அவைகளுக்கு சிறகு முளைத்தவுடன் சென்றுவிடச் செய்து சந்தோஷமாக வாழ்கின்றனவே!

ஐந்து அறிவு கொண்ட பறவையினம், பாடியும் பறந்தும், கூடியும் குழைந்தும் கும் மாளமாய் வாழ்கின்றனவே!