பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. அணி

வசனத்தையும் ుj அழகுசெய்து நிற்பது அணி யாகும். (அணி-அழகு) உவமை அணி :

(உ-ம். பவளம்போல் சிவங்க வாய்

இதில் வாயின் சிவப்பு நிறத்தைப் பவளத்தின் சிவப்பு நிறத்தோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறது. இது உவமை யணி ஆகும்.

ஒரு பொருளைக் கூறும்போது அகற்கு ஒப்பாக வேருெரு பொருளைக் கூறி, இரண்டு பொருள்களுக்கும் ஒப்புமை விளங்கச் சொல்வது உவமை அணி யாகும்.

உவமை அணிக்கு உவமானம், வமேயம், பொதுத்தன்மை, உவம உருபு என நான்கு உறுப்புக் கள் உண்டு.

ஒரு பொருளுக்கு உவமையாகக் கூறப்படுவது உவமானம். அதல்ை உவமிக்கப்படும் பொருள் உவமேயம். இவ் வி ர ண் டி ற் கு ம் ஒப்பாகவுள்ள பொதுவான கன்மை பொதுத்தன்மை. உவமையை விளக்க இடையில் வரும் போல, அன்ன முகலியன உவம உருபு.

மேற்கூறிய உதாரணத்தில் பவளம் உவமானம்; வாய் உவமேயம் ; சிவப்பு கிறம் பொதுத்தன்மை ; போல்,-உவம உருபு.

உருவகம்: உவமானத்தையும் உவமேயத்தை யும் ஒ ன் ரு க வே கருதி ஒற்றுமைப்படுத்திக் கூறுவது உருவகம் ஆகும்.

(உ-ம்.) திருவடித் தாமரை

சொல் அமுதம்