பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர் “அதில் என்ன மாற்றம் நல்லது செய்தவன் நன்றாக இருப்பான்” என்றார்.

இதைப் புதுமைப்பித்தனிடம் சொன்னேன் “அப்புறம் என்ன புரட்சிக் கவிஞர்” என்று சொல்லி சிரித்தார்.

அசலும் போலியும்

புதுமைப் பித்தனுக்கு பெரும்பாலும் அசல்தான் பிடிக்குமே தவிர போலி பிடிக்காது, ஒரு சமயம் தேசிய முஸ்லீம், வெஜிடபிள் பிரியாணி, ஆங்கிலோ இண்டியன் இதை சொல்லிவிட்டு இதெல்லாம் என்ன வேடிக்கை என்று சிரித்தார்.

தனித்தன்மை

க. நா. சு. “சூறாவளி” என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். அதன் அலுவலகம் பிராட்வேயில் இருந்தது. மாதம் ஒருமுறை கூட்டம் நடைபெறும் பிரதமவிருந்தினராக ஒருவர் பேசுவார். ஒருமுறை கூட்டத்துக்கு ரசிகமணி டி. கே. சி. வந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் மஞ்சரி ஆசிரியர் தி. ஜ. ர., புதுமைப் பித்தன், நான் மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம் அந்த இடத்திற்கு ரசிகமணி வந்து “என்ன விருத்தாச்சலம் செளக்கியமா” என்ற கேட்டார்.

மற்றவர்களானால் பிரமுகர்களைத் தேடிப் போவார்கள். புதுமைப்பித்தன் அப்படியெல்லாம்

9