பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘கை சுட்டு விடும்’ உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றார் புதுமைப்பித்தன்.

‘கலைமகள்’ தவிர வேறு எந்தப் பத்திரிகைக்கும் அவர் எழுதியதில்லை.

எப்போது போவாய்?

புதுமைப்பித்தனின் தந்தை விருத்தாச்சலத்தில் அரசு உத்தியோகத்தில் இருந்தார். அப்போது புதுமைப்பித்தன் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் அவருடைய தந்தையார் அவர்களை வாவா என்று வரவேற்று எப்போது திரும்ப போகப் போகிறாய் என்று கேட்பாராம் (உறவினர் முகம் சுளிப்பர்) அதாவது உடனே சென்று விடாமல் இரண்டு மூன்று நாள் தங்கி விட்டுப் போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கூறுவாராம்.

இயற்பெயர்

புதுமைப்பித்தனின் தந்தையார் விருத்தாச்சலத்தில் அரசு உத்தியோகத்தில் இருந்தார். அப்போது புதுமைப்பித்தன் பிறந்தார். அதனால் அவருக்கு விருத்தாச்சலம் என்று பெயர் சூட்டினார் (புதுமைப் பித்தனின் இயற்பெயர் விருத்தாச்சலம்)

எறும்பு சிவம்

ராய.சொ. நடத்திய ‘ஊழியன்’ பத்திரிகையில் புதுமைப்பித்தனை ஒரு உதவியாசிரியராக அமர்த்தி வைத்தார் பேராசிரியர் வ.ரா ஈ சிவம்

11